Ethirneechal: குணசேகரன் வீட்டில் டேரா போடும் ராமசாமி அப்பத்தா: எஸ்கேப்பான ஜீவானந்தம்: எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : கான்ஸ்டபிள் உதவியால் போலீசிடம் இருந்து எஸ்கேப்பான ஜீவானந்தம். குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்த ராமசாமி குடும்பம் செய்யும் கலகம். இந்த எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 22) எபிசோடில் நீதிபதியிடம் ஈஸ்வரி மகளை தேடித் தருமாறு கெஞ்சி கேட்கிறாள். அதற்கு பிறகு எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்று கொள்கிறேன் என ஈஸ்வரி சொல்கிறாள். ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் மேலும் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்க சொல்லி தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி.

ஜனனியும், சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். மனு கொடுத்துவிட்டு வந்தது பற்றியும் அவர்கள் ஸ்பெஷல் ஃபோர்ஸ் வைத்து விசாரிப்பதாக சொன்னது பற்றியும் மற்றவர்களிடம் சொல்கிறார்கள். கதிர், நாமும் போய் தர்ஷினியைத் தேடலாம் என சொல்ல, ஜனனி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறாள். அந்த நேரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தில் இருந்து ராமசாமி, கிருஷ்ணசாமி, உமையாள் மற்றும் அப்பத்தா குணசேகரனை பார்க்க வருகிறார்கள். வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கவலையுடன் விசாலாட்சி அம்மா பேசுகிறார்.

Continues below advertisement

 



"இத்தனை வருஷமா உன்னோட வாழ்ந்த பொண்டாட்டியே இப்படி பண்ணிட்டாளே" என ராமசாமியின் அப்பத்தா குணசேகரனை ஏத்தி விடுகிறார். அதைக்கேட்டு கோபமான ஜனனி உள்ளே நுழைந்து "நீங்க எதுக்காக இங்க வந்தீங்க?" என அதட்டலாக கேட்க குணசேகரன் ஜனனியை "நீ யாரு அதை கேட்க. வாயை மூடு" என அதட்டுகிறார். உமையாள் ஜனனியை பற்றியும் ஜனனியின் அம்மாவைப் பற்றியும் கேவலமாக பேசுகிறாள்.

தம்பிகளை பற்றி கேவலமாக பேசுகிறார் குணசேகரன். அந்த நேரம் பார்த்து ரேணுகாவின் அம்மா வீட்டுக்கு வருகிறார். அவரை அவமானாக பேசுகிறார் குணசேகரன். ஞானத்திற்கும் ரேணுகாவிற்கும் 15 லட்சம் பணம் கொண்டு வந்து தொழில் செய்வதற்காக கொடுக்கிறார். ஞானம் பிச்சை எடுத்து பொழைக்கிறான் என குணசேகரன் சொல்ல ரேணுகா அவரை எதிர்த்து பேசுகிறார்.

குணசேகரனுக்கு சப்போர்ட்டாக தர்ஷனை அசிங்கப்படுத்தி ராமசாமி பேச, கதிர் கோபமாகச் சென்று அவன் சட்டையைப் பிடிக்க கதிரை அசிங்கப்படுத்துகிறார் குணசேகரன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான் கதிர். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரேணுகாவின் அம்மா ஞானத்திடம் பணத்தைக் கொடுத்து "ஏதாவது தொழில் பண்ணி அந்த ஆள் மூஞ்சியில கரியை பூசணும் தம்பி" என சொல்கிறார்.

 



ராமசாமியின் அப்பத்தா "நான் இங்க இரண்டு நாள் தங்கிட்டு வரேன்" என சொல்லி அவர்களை அனுப்பிவிடுகிறார். அனைவரையும் அவர்கள் அவமானப்படுத்தி பேச கோபமான ஞானம் "நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரவா" என எழுந்திரிக்க ரேணுகா அவனை அடக்கி உட்காரவைக்கிறாள். கதிர் அவர்களின் மூஞ்சில் அடித்தது போல ஏதோ ஒரு பொருளை தூக்கி விசிறியடிக்கிறான்.

 


ஜீவானந்தத்தை காவலில் வைப்பதற்காக கோர்ட்டில் இருந்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வண்டியில் உட்கார வைக்கிறார்கள். அப்போது காவலுக்காக இந்த கான்ஸ்டபிள் ஜீவானந்தத்தை பார்த்து "நீங்க போய் அந்த பொண்ணை எப்படியாவது தேடி கண்டுபிடிங்க" என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

போலீஸ் வந்து தேட கான்ஸ்டபிள் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பது போல நடிக்கிறார். ஜீவானந்தம் கான்ஸ்டபிளை அடித்து விட்டு எஸ்கேப் ஆனது போல சொல்லி விடுகிறார். ஈஸ்வரிக்கு கண்ணை காட்டி அனுப்பி வைத்ததை பற்றி சொல்கிறார். ஈஸ்வரியும் சற்று ஆறுதல் அடைகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola