எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரில் நடித்த விஜே விமல்குமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சோகமான காதல் கதை பற்றி பேசியுள்ளார். 


எதிர்நீச்சல் சீரியல்


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குநர் திருசெல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் கனிகா, வேல ராமமூர்த்தி, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சபரி பிரசாந்த், கமலேஷ், விபூராமன், சத்தியபிரியா, சத்யா தேவராஜன், காயத்ரி கிருஷ்ணன் என பலரும் நடித்து வருகின்றனர். இந்த எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் என்னும் கேரக்டரில் விஜே விமல் நடித்து வருகிறார். தன்னுடைய பரிதாபமான நடிப்பால் மிகப்பெரிய அளவில் பிரபலமான விஜே விமல் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய காதல் கதை பற்றி பேசியுள்ளார்.


மாரிமுத்து பற்றி பேச்சு


அதில் மறைந்த நடிகர், இயக்குநர் மாரிமுத்து பற்றி பேசினார். அதாவது, “மாரிமுத்து மறைவு எல்லாருக்கும் பெரிய இழப்பாக உள்ளது. வேலை பார்த்த எல்லாருக்குமே அவர் ஒரு நடிப்பு ஆசிரியராக தான் இருந்தார். கேரக்டரையும் தாண்டி ஒரு உறவு என்பது உருவாச்சு. தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் சொல்லுறப்ப எல்லாம் அழுகையே வரும். மாரிமுத்து மறைவு அன்னைக்கு நாங்க பனையூரில் ஷூட்டிங்கில் இருந்தோம். எங்களுக்கு போன் வந்தப்ப நம்பவே முடியல. மாரிமுத்து மறைவு அன்னைக்கு 30க்கும் மேற்பட்ட போன் வந்துச்சு. நான் எங்க அண்ணனுக்கு போன் பண்றேன். பைக்கை சைட் ஸ்டாண்ட் போடாம இறங்கி கீழே விழுந்துட்டேன். சைடுல ஒரு லாரி பக்கத்துல போச்சு. எனக்கு என்ன நடக்குன்னே புரியல. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட சில நேரம் மாரிமுத்து நியாபகமா வரும். அவர் இன்னைக்கு வரைக்கும் இருக்காருன்னு தான் நம்புறேன். 


விமலின் காதல் கதை 


மேலும், “எனக்கு இதுவரை எந்த காதல் ப்ரோபோசலும் வரவில்லை. அதேசமயம் நான் ஒரு பெண்ணுக்காக கடிதம் எழுதி அதை ஒருவரிடம் கொடுத்து விட்டேன். ஆனால் அந்த கடிதம் சேரும் இடத்துக்கு போகவில்லை . நான் கொடுக்க சொன்ன நபர் கடிதத்தை படித்துவிட்டு இதையெல்லாம் நமக்கு செட் ஆகாதுடா. நீ நல்ல பிள்ளை தானே. வீட்டுல உன்னை எப்படி நம்புறாங்க. இதெல்லாம் சரி கிடையாது என சொன்னார். அப்ப நான் பள்ளியில் 7வது படித்துக் கொண்டிருந்தேன். 
எல்லாமே ஒருதலை காதல் தான். 


வாழ்க்கையில் ஒருத்தருக்கு நம்மை பிடிக்குமா, பிடிக்காதா என தெரியாமல் போய் பேசுவது தவறான விஷயம். நாம் ஆசையை வளர்த்துக் கொள்வதும் தவறு தான். நாம் சொல்லாத வரை எந்தளவு வேண்டுமானாலும் ஆசையை வளர்த்துக் கொள்ளலாம். உள்ளுக்குள்ளே சந்தோசப்பட்டுக்கலாம். ஆனால் என்னைக்காவது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கல்யாணம் என வரும்போது நாம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஒரு தலை காதல் என்னை பொறுத்தவரை சௌகரியமான ஒன்று. எனக்கு பள்ளி, கல்லூரியில் என மொத்தம் 2 ஒருதலை காதல் தான் இருந்தது” என விஜே விமல்குமார் கூறியுள்ளார்.