சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 1) எபிசோடில் தர்ஷினியை தேடி ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா செல்ல ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது அங்கே வந்த சிலர் அவர்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்ய அவர்களை முடிந்த வரையில் அடித்து தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள் பெண்கள். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இதை பார்த்துவிட்டு வந்து நிற்க அதில் இருந்து ஒருவர் இறங்குகிறார். அவர்தான் ஜீவானந்தம். ஜீவானந்தம் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த ஆட்களை விரட்டி விடுகிறார்.
மறுபக்கம் தர்ஷினி அந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வயிறு வலிக்கிறது என சொல்லி பேப்பரில் மருந்தை எழுதி தருகிறேன் என சொல்லி அவளை கடத்தி வைத்திருப்பது பற்றி தகவல் எழுதித்தருகிறாள். இங்கிலீஷ் படிக்க தெரியாத அந்த ரவுடி மற்ற அடியாட்களிடம் தர்ஷினியை பார்த்து கொள்ள சொல்லி மருந்தை வாங்கி வருவதற்காக செல்கிறான்.
அப்போது மற்ற அடியாட்கள் வெளியில் வந்து நிற்க ஒருவனை மட்டும் தர்ஷினிக்கு காவலாக வைத்து விட்டு செல்கிறார்கள். ஆனால் அவனோ தர்ஷினியிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறான். தர்ஷினி கூச்சல் போடுகிறாள். அந்த நேரம் பார்த்து மருந்து வாங்க சென்ற அந்த ரவுடி திரும்பி வரவே தர்ஷினியின் கூச்சல் சத்தம் கேட்டு உள்ளே ஓடுகிறான். தர்ஷினியிடன் தப்பாக நடக்க முயற்சி செய்தவனை சுட்டு தள்ளிவிடுகிறான். அந்த டெட் பாடி அங்கேயே இருக்கட்டும் அப்போ தான் அவ தப்பிச்சு போக முயற்சி செய்யமாட்டா என சொல்லிவிட்டு செல்கிறான். அந்த பிணத்தை பார்த்து தர்ஷினி பயத்திலிருக்கிறாள்.
ஜீவானந்தத்திடம், தர்ஷினி காணாமல் போனது பற்றி நந்தினி சொல்கிறாள். அவரும் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கிறார். பெண்கள் அனைவரும் ஜீவானந்தம் காரில் ஏறி தர்ஷினியை தேட செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மருமகள்களை பற்றி மோசமாக பேச, ஞானம் அழுதுகொண்டே "பெத்த பொண்ணையே ஒளிச்சு வச்சுட்டு இப்படி ரா பகலா தேடிகிட்டு இருப்பாங்களா அம்மா அவங்க" என சொல்ல விசாலாட்சி அம்மா கண்கலங்குகிறார்.
ஒரு காட்டு பகுதிக்கு சென்று ஜீவானந்தம் "பெரும்பாலும் இந்த பக்கமா எந்த ஒரு வண்டியும் வரது இல்ல. ஆனா நேத்து ஒரு கார் போயிருக்கு ஆனா அதுவும் திரும்பி வரவேயில்ல" என ஜீவானந்தம் தனக்கு கிடைத்த தகவலை சொல்கிறார்.
இங்க இருந்து கிளம்பலாம் என சொல்ல அப்போது தர்ஷினி மருந்து சீட்டு எழுதி கொடுத்ததை ஜீவானந்தத்திடம் காட்டி அதை பற்றி விசாரிக்கிறான் அந்த ரவுடி. அவர்கள் பேசுவதை பெண்கள் காரில் இருந்த படியே பார்க்கிறார்கள்.
வீட்டில் கதிர், ஞானம் மற்றும் தர்ஷன் எங்கோ கிளம்ப தாரா ஓடி வந்து "பெரியப்பா இவ்வளவு மோசமா பேசுனதுக்கு அப்புறம் நாம ஏன் அவரோட சாப்பாடு சாப்பிடணும்?" என கேள்வி கேட்டு செல்கிறாள். அதை கேட்டு ஞானமும் கதிரும் புரியாமல் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.