சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 16 ) எபிசோடில் ரேணுகா மற்றும் நந்தினியை விசாரிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வீட்டுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வகையில் சம்பாதிப்பது குறித்து தெரியவருகிறது. அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜனனியிடம் விசாரிக்கும்போது அவள் விருப்பமே இல்லாமல் அந்த வீட்டில் இருக்கக் காரணம் என்ன என வக்கீல் கேட்கிறார்.
“ஜீவானந்தம் தான் சொத்துக்காக ஆசைப்பட்டு என்னுடைய வீட்டு பொம்பளைகளை கைக்குள்ளே போட்டு கொண்டு இப்போது என்னுடைய பொண்ணைக் கடத்தி வைத்து கொண்டு நாடகம் ஆடுகிறான்” என பழி போடுகிறார் குணசேகரன். அப்போது சாருபாலா குணசேகரனுக்கு எதிரான ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்பிக்கிறார். ஆதிரையின் திருமணம், பள்ளியில் படிக்கும் தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தது என அனைத்தையும் சமர்ப்பிக்க, நீதிபதி அது பற்றி குணசேகரனிடம் விசாரிக்க, அவர் பதில் எதுவும் சொல்ல முடியாமல் முழிக்கிறார்.
அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷினியின் வீடியோ ஆதாரம் ஒன்று காட்டப்படுகிறது. அதில் தர்ஷினி திக்கித் திக்கி பேசுகிறாள். யாரோ அவளை மிரட்டி சொல்லிக்கொடுத்ததை சொல்ல சொல்வது போல மயக்கத்துடனேயே பேசுகிறாள். “என்னுடைய அம்மா ஈஸ்வரியும் அவங்க ப்ரெண்ட் ஜீவானந்தமும் சேர்ந்து தான் என்னைக் கடத்தினாங்க. நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். திரும்பவும் என்னைக் கடத்திக்கொண்டு வந்து வேற ஒரு இடத்துல அடைச்சு வைச்சு இருக்காங்க. தயவு செஞ்சு எங்க அப்பாகிட்ட சொல்லி என்னைக் காப்பாத்த சொல்லுங்க என வாக்குமூலம் கொடுக்கிறாள். அவள் பேசிய இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குணசேகரனும் மகளைப் பார்த்து கண்கலங்குகிறார்.
எதுவுமே புரியவில்லை ஆனால் ஜீவானந்தம் சொன்னது போல "ஆமாம் நான் தான் என்னோட பொண்ணை கடத்தி வைச்சு இருக்கேன். இவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என மற்ற பெண்களைப் பார்த்து ஈஸ்வரி சொல்லம் அவர்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. "அக்கா ஏன் இப்படி சொல்றீங்க? எங்களை காப்பாத்துறதுக்காக எதுக்கு இப்படி சொல்றீங்க" எனக் கதறுகிறார்கள். நீதிபதி ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை ஜாமீனில் விடுதலை செய்யவும் தீர்ப்பு வழங்குகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். "என்னுடைய பொண்ணை இவன் தான் கடத்தி வைச்சு இருக்கான்? அந்த வீடியோவை அனுப்பி வைச்சது யாரு?" என குணசேகரன் கொந்தளிக்க, "எனக்குத் தெரியும் குணசேகரன்" என சாருபாலா சரியான பதிலடி கொடுக்கிறார். அதை பார்த்து குணசேகரன் முறைக்கிறார்.
வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் ஈஸ்வரியின் அப்பா "என்னுடைய பொண்ணை என்ன பண்ண? உயிரோட இருக்காளா இல்ல மொத்தமா சாவடிச்சுட்டியா?" எனக் கேட்கிறார். அப்போது ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனியை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன்.
"என்னோட பொண்ணை நான் கண்டுபிடிச்சுக்குவேன். எவனோட தயவும் எனக்கு தேவையில்லை. இந்த குணசேகரன் இல்லாம இவங்க எப்படி வாழறானுங்கனு பாத்துருவோம்" என்கிறார். அவர் அசிங்கப்படுத்தி பேசியதைக் கண்டு பொறுக்காமல் மனம் வேதனைப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.