சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த வாரம் தர்ஷினியை தேடிக் கண்டுபிடிக்க ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு உதவுகிறார். ஆனால் குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக கொடுத்த புகாரின் பேரில் ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறது. மறைமுகமாக ஜீவானந்தம், பெண்களுக்கு தர்ஷினியை தேட இது தான் ஒரே வழி என சொல்கிறார். அவர் சொன்னது போலவே பெண்களும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தை அடைகிறார்கள். ஆனால் தர்ஷினி அவர்கள் அங்கே செல்வதற்கு முன்னரே ரவுடிகளிடம் இருந்து தப்பித்துவிடுகிறாள்.
தர்ஷினி தான் ஆபத்தில் இருப்பதாக சொல்லி எழுதி போட்ட பேப்பர் மட்டும் அவர்கள் கைக்கு கிடைக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் அந்த இறந்த ரவுடியின் உடல் மட்டும் கிடக்கிறது. அதைப் பார்த்த நான்கு பெண்களும் அதிர்ச்சி அடைந்து வேகவேகமாக போலீசின் உதவியை தேடி ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். ஆனால் குணசேகரன் அவர்கள் மீது கொடுத்த புகாரால் இன்ஸ்பெக்டர் அவர்கள் நால்வரையும் குற்றவாளிகளை போல விசாரிக்கிறார்.
தகவல் அறிந்த குணசேகரன் அங்கே வந்து ஜீவானந்தம் தான் சொத்துக்காக எங்கள் வீட்டு பெண்களை கைக்குள் போட்டு என்னுடைய பெண்ணை கடத்தி வைத்து இருக்கிறான் என்றும், அதற்கு இவர்கள் நால்வரும் உடந்தை என்றும் பழி போட்டுவிடுகிறார். கோர்ட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்ல அங்கே நீதிபதி, ஜீவானந்தம் மற்றும் நான்கு பெண்களையும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு வழங்குகிறார்.
குணசேகரன் பெண்களுக்கு நடந்ததைப் பற்றி வீட்டில் சொல்ல கதிர், ஞானம், சக்தி மற்றும் தர்ஷன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைகிறார்கள். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்களிடம் பெண் காவல் அதிகாரி நடுவில் இருந்த ரேணுகாவையும் நந்தினியையும் விசாரணைக்காக ஒரு ரூமுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.
மறுபக்கம் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ரவுடிகள் கோபமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஒரு ஸ்கூல் பொண்ணு என்ன அழகா பிளான் பண்ணி உங்க எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு எஸ்கேப் ஆகி இருக்கு" என்கிறான்.
கதிர், சக்தி மற்றும் ஞானம் போலீஸ் ஸ்டேஷன் வந்து விடுகிறார்கள். நான்கு பெண்களையும் பார்க்க முடியாது என போலீஸ் ஸ்டேஷனில் சொல்கிறார்கள். "யாரைக் கேட்டு அவங்களை அரெஸ்ட் பண்ணீங்க?" என ஞானம் கேட்க, "அவங்களைப் பார்த்து பேசிட்டு தான் இந்த இடத்தை விட்டு நகருவோம்" என்கிறான் தர்ஷன்.
அவர்கள் விடாப்பிடியாக சண்டை போட, நந்தினியை மட்டும் வெளியே அனுப்புகிறார்கள். பலத்த காயங்களுடன் நடக்கக் கூட முடியாமல் நந்தினி வெளியில் வருவதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கதிர் நந்தினியை கைத்தாங்கலாக அழைத்து வருகிறான். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.