சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (டிசம்பர் 27) எபிசோடில் நந்தினி, ஈஸ்வரியுடன் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக கதிர் அவளை போகவிடாமல் தடுக்கிறான். நந்தினி நான் போய் தான் தீருவேன் என சண்டைபோட ஈஸ்வரி அங்கே வந்து அவளை வீட்டிலேயே இருக்க சொல்லி விட்டு அவர்கள் கிளம்புகிறார்கள்.

ஞானமும் ரேணுகாவை போக விடாமல் தடுக்கிறான். ரேணுகாவின் அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை, பணம் வேண்டும் எனக் கேட்டாங்க, போய் கொடுத்துட்டு வா என சீன் போடுகிறான். ஈஸ்வரி ரேணுகாவையும் நந்தினியையும் வீட்டிலேயே விட்டுவிட்டு ஜனனி, சக்தியுடன் கிளம்புகிறாள்.


 




குணசேகரன் ஒரு பக்கம் ஆடம்பரமாக பிரச்சாரம் செய்ய ஈஸ்வரி மறுபக்கம் அமைதியாக பிரச்சாரம் செய்து ஓட்டுக்களை சேகரிக்கிறாள். அப்போது பாட்டி ஒருவர் ஈஸ்வரியிடம் "உங்களுக்கு நான் ஓட்டு போட்டா எவ்வளவு பணம் கொடுப்பீங்க" என கேட்டு ஷாக் கொடுக்கிறார்.  "யார் அதிகமா பணம் கொடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம்" எனக் கேட்கிறார். ஜனனி அவர்களுக்கு புரியும்படி எடுத்து சொல்கிறாள். அதைக் கேட்டு அந்த பாட்டி புரிந்து கொண்டு அவளுக்கே ஓட்டு போடுவதாக சொல்கிறார்.

குணசேகரனும் தம்பிகளும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது குணசேகரனுக்கு தேர்ந்த நபர் ஒருவரின் மகனை அழைத்து வருகிறார்கள். அவரிடம் பணத்தைக் கொடுத்து எத்தனை ஓட்டு இருக்கோ அவங்களுக்கு பணம் கொடுக்க சொல்லி சொல்கிறார் குணசேகரன். அவன் "பணம் வாங்கி ஓட்டு போடுறவன் நானில்லை. எனக்கு உங்க காசு தேவையில்லை" என சொல்ல அவனை அனைவரும் சேர்ந்து கண்டிக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பெண்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "நிச்சயமா நாம ஜெயிச்சுடலாம். நம்பிக்கையோட இருங்க" என சொல்ல அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.


 




ஜனனியின் அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "அவ என்னை துளி கூட மதிக்க மாட்டேங்குறா..." என நாச்சியப்பன் சொல்ல, "அஞ்சனாவும் சரி, ஜனனியும் உங்களை மதிக்கலன்னு நினைக்குறீங்களா?" என கேட்கிறார் ஜனனியின் அம்மா.


 




வீட்டில் குணசேகரன் எலெக்ஷன் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என ஜான்சி சொன்ன பிளான் படி அனைவரும் பணத்தைக் கொடுத்த குணசேகரன் "அவனுங்க மட்டும் ஓட்டு குத்தலை... அப்புறம் ஆத்தாளையும் மகனையும் ஒரே குத்தா குத்திப்புட்டு போயிடுவேன்" என ஜான்சியையும் கரிகாலனையும் பார்த்து மிரட்டுகிறார்.   இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.