சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் கதிருக்கு கை கால் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதை பார்த்த குணசேகரன் ஆவேசத்தில் கதிரின் இந்த நிலைக்கு காரணமானவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என சபதமிடுகிறார். கதிர் அடிபட்டாவது திருந்துவான் என எதிர்பார்த்தால், திமிரு கொஞ்சமும் குறையாமல் அதே எரிச்சலை மனைவியிடமும் மக்களிடமும் காட்டுகிறான். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு நந்தினி கதிருக்கு தேவையான அனைத்து வேலைகளையும் சகித்துக் கொண்டு செய்கிறாள். அதை பார்த்த கதிர் வார்த்தைகளால் சொல்லவில்லை என்றாலும் அவனது கண்ணீர் மூலம் உணர்ச்சி வெளிப்பட்டது.
குணசேகரன் எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று ரகளை செய்வதற்காக தம்பிகளையும் கரிகாலனையும் அழைத்து கொண்டு செல்கிறார். அத்துடன் சென்ற வார எபிசோட் முடிவுக்கு வந்தது.
குணசேகரன் எஸ்.கே.ஆர் வீட்டில் வந்து உட்கார்ந்து திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார். எஸ்.கே.ஆருடன் சாருபாலாவும் இருக்கிறார். "என்னோட தம்பியை பழிவாங்க வேண்டும் என நினைச்சு அடிச்சது நீதானே..." எனக் கேட்கிறார் குணசேகரன். "என்னோட தம்பி அருணுக்கு கார் ஆக்சிடன்ட் பண்ணது நீ தான்னு ஒத்துக்குறியா" என திருப்பி எஸ்.கே.ஆர் கேட்க, குணசேகரன் முகமே மாறிவிடுகிறது.
எதிர்நீச்சல் தொடர் மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கியதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள். ஆதிரைக்கு இப்போது தான் குணசேகரனை எதிர்க்க துணிச்சல் வந்துள்ளது. இனி அவள் சந்திக்கப் போகும் சவால்கள் என்னென்ன? வரும் எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும்.
