சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (டிச.13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தாராவின் ஸ்கூலுக்கு நந்தினியுடன் சென்ற கதிரை வெளியில் வந்ததும் சில மர்ம நபர்கள் தாக்கியதால், பலத்த காயங்களுடன் மயக்கமாக இருக்கும் கதிரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி. அவனை மருத்துவமனை சேர்த்து குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கிறாள்.
ஆனால் தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனனியின் பிசினஸை இடையில் புகுந்து கெடுத்து வரும் கிருஷ்ணன் மெய்யப்பனுக்கு குணசேகரன் சப்போர்ட் செய்வதும், கதிர் தற்போது அடிபட்டு கால் உடைந்து மருத்துவமனையில் இருப்பது என அடுத்தடுத்து ஷாக் கொடுத்து எதிர்நீச்சல் தொடரை மீண்டும் சூடு பிடிக்க செய்துள்ளனர்.
கதிரின் இந்த நிலைக்கு யார் காரணமாக இருப்பார்கள்? இதற்கு பின்னணியில் கௌதம் இருப்பானா? ஜனனி தன்னுடைய சித்தப்பா நாச்சியப்பனின் மகள் தான் என்பதை கிருஷ்ணன் மெய்யப்பன் கண்டுபிடிப்பானா? அதனால் வெடிக்கப் போகும் புதிய பிரச்னைகள் என்னென்ன? என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது அப்பத்தாவின் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலில் உள்ள குணசேகரன் விரைவில் வெளியே வருவாரா? அப்பத்தாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருமா என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.