சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் சாமியார் குணசேகரனை அழைத்து வருகிறார். காரில் இருந்து இறங்கிய குணசேகரன் தம்பிகளை பார்க்க செல்கிறார். லெக் ஷாட்டில் மட்டுமே குணசேகரனை காட்டுகிறார்கள். தம்பிகள் இருவரும் அசந்து தூங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை சாமியார் எழுப்புகிறேன் என சொன்னாலும் வேண்டாம் நான் சொல்வதை மட்டும் அவர்களிடம் சொல்லி விடுங்கள் என சொல்லிவிட்டு தனது ஞாபகமாக இருக்கட்டும் என சொல்லி செருப்புகளை தம்பிகளின் செருப்புக்கு பக்கத்தில் விட்டுவிட்டு செல்கிறார் குணசேகரன்.
வீட்டில் அனைவரும் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்க வெண்பா படிப்பதை மூடிவைத்துவிட்டு சோகமாக இருக்கிறாள். அதை பார்த்த ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்டதும் "எனக்கு அப்பா கிட்ட பேசணும்" என சொல்கிறாள் வெண்பா. ஈஸ்வரி வெண்பாவை உள்ளே அழைத்து சென்று ஜீவானந்தத்திற்கு போன் செய்து கொடுக்கிறாள்.
"எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு. நீங்க எப்போ வருவீங்க?" என வெண்பா கேட்கிறாள். "நான் சீக்கிரம் வந்து விடுவேன். நீ ஈஸ்வரி ஆண்டிக்கு தொந்தரவு செய்யாமல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்" என ஜீவானந்தம் சொல்கிறார். பின்னர் ஈஸ்வரியிடம் கயல்விழி பற்றிய ஞாபகங்களை பற்றி சொல்லி கவலை படுகிறார்.
ஞானம் தூங்கி எழுந்ததும் சாமியாரிடம் போய் "எங்கய்யா எங்க அண்ணன்? எங்களை ஏமாத்துறியா?" என கேட்கிறான் கதிர். "உங்க அண்ணன் வந்தாரு. நீங்க நல்லா தூங்கிகிட்டு இருந்தீங்க. அதனால் அவர் சொல்ல சொல்லிட்டு கிளம்பிட்டாரு" என்கிறார் சாமியார். "எனக்கு தெரியும் நீ பிராடுன்னு. தூங்குனா எழுப்ப வேண்டியது தானே" என்கிறான் கதிர். "அவருக்கு விருப்பமில்லை. வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. உங்க ஊர்ல இப்போ திருவிழா வர போகுதுல அதை நல்லபடியா சிறப்பா செய்யணும் என சொன்னாரு. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா அங்க பாருங்க" என குணசேகரன் விட்டு சென்ற செருப்பை காட்டுகிறார் சாமியார்.
"திருவிழாவுக்கு அந்த ஜீவானந்தமும் அப்பத்தாவும் நிச்சயமாக வரவேண்டும். உங்க அண்ணன் வந்து இறங்கும் போது அவர்கள் இருவரும் உயிருடன் இருக்க கூடாது. இதுவரைக்கும் அவர்களுக்கு தேவையான எல்லாம் நான் செய்து விட்டேன். எனக்காக அவர்கள் இதை செய்தால் தான் அவர்கள் என்னுடைய தம்பிகள்" என குணசேகரன் சொன்னதாக கதிரிடம் சாமியார் சொல்கிறார்.
அடுத்த நாள் கேட்டரிங் சமையலுக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனனியும் சக்தியும் இல்லாததால் தனியாக நந்தினி ஆட்டோவில் செல்ல எல்லாத்தையும் வெளியில் எடுத்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து கதிரும் ஞானமும் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். வேகவேகமாக சமைத்து வைத்த அனைத்தையும் மறைத்து வைக்கிறார்கள்.
விசாலாட்சி அம்மாவிடம் நடந்த அனைத்து விஷயத்தை பற்றி சொல்கிறார்கள். அதை கேட்ட கரிகாலன் "என்னை கிறுக்கு பய என சொல்லிப்புட்டு நீங்க அங்க போய் தூங்கிட்டீங்களா" என சொல்கிறான். அவனை திட்டிய கதிர் "எங்க அண்ணன் வருவாரு" என சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் செல்கிறான். "இன்னும் ஒரு வாரம் தான் எங்க அண்ணன் வந்துருவாரு. அதுக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் இருக்கு" என மிரட்டிவிட்டு திரும்புகையில் கேட்டரிங் ஆர்டருக்கு சமைத்து வைத்துள்ள பாத்திரங்களை பார்த்துவிடுகிறான் கதிர். நந்தினி திருதிருவென முழிக்க கதிர் அவர்களை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.