சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குட்டி பூனை போல இங்கும் அங்கும் திரிகிறான் கரிகாலன். பத்தாதற்கு ஞானத்தை ஏத்திவிட்டு கொண்டு இருக்கிறான். "நீங்க ரேணுகா அக்காவோட புருஷன் தானே அவங்க என்ன பண்ணறாங்கனு போய் பாத்துட்டு வரலாம்ல" என கேட்கிறான். "நீ வாயை மூடிட்டு சும்மா இரு எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என கரிகாலனை அடக்குகிறான் ஞானம்.





அந்த சமயத்தில் ரேணுகா டீச்சர் மற்றும் அந்த பிள்ளைகளை கீழே அழைத்து வருகிறாள். அவர்களை தடுத்து நிறுத்திய ஞானம் " ஐஸ் எங்க. அவளோட படிக்குற பசங்கன்னா அவளை ஏன் காணும். நீங்க என்ன பாடம் மா படிச்சீங்க. வாயை திறந்து சொல்லுங்க... அல்லது எப்படி விசாரிக்கணுமா அப்படி விசாரிக்க வேண்டி இருக்கும்" என்கிறான். ரேணுகா திருதிருவென முழிக்க கரிகாலனை ஞானத்திடம் "அக்கா முழியே சரியில்ல" என சொல்லி அவனை மேலும் கோபமடைய செய்கிறான்.

"டீச்சர் உடனே அவங்களால பேசவும் முடியாது காதும் கேட்காது" என்கிறார். "உங்களுக்கு பயந்ததெல்லாம் போதும். இனிமேல் அடங்கி போகுறதா இல்ல. உங்க அண்ணனே கதின்னு இருக்கீங்க இல்ல அதை மட்டும் பாருங்க. வேலை வெட்டி எதுவும் பார்க்காம பொம்பளைங்க என்ன பண்றாங்க பாக்குறதே வேலையா போச்சு" என சொல்லி அனைவரையும் அடக்கி விட்டு டீச்சரை அனுப்பி வைக்கிறாள் ரேணுகா.


 




வெளியில் சென்றதும் ரேணுகாவை ஈஸ்வரி பாராட்டுகிறாள். எப்படியோ நல்ல படியா இந்த பிள்ளைகளுக்கு காது கேக்காதுன்னு சொல்லி சமாளிச்சுட்ட என ஈஸ்வரி சொல்ல "இல்ல அக்கா இவங்களுக்கு நிஜமாவே காது கேட்காது, வாயும் பேச முடியாது. இவங்களுக்கு இந்த டச் தெரபி மூலம் டான்ஸ் கற்று தர வேண்டும் என்பது என்னுடைய சின்ன ஆசை. சும்மா ட்ரை செய்து பார்க்கிறேன்" என சொல்ல ஈஸ்வரி ரேணுகாவை ஆச்சரியமாக பார்த்து, "எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிட்டு சின்ன விஷயம்னு சொல்ற. நீ நிச்சயம் பெரிய ஆளா வர போற பாரு" என பாராட்டுகிறாள்.

தர்ஷனுக்கு அவனுடைய புராபசர் போன் செய்து ஈஸ்வரியிடம் பேசுகிறார். "பெண்கள் மட்டும் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் அவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க என்னை அழைக்கிறார். நல்ல பேமெண்ட் கொடுக்கிறார்களாம். அதுவும் இன்னிக்கே வரவேண்டும் என சொல்கிறார்கள்" என ஈஸ்வரி சொல்ல ரேணுகா "நீங்க இவர்களை பற்றி எல்லாம் கவலை படாதீங்க. உடனே கிளம்புங்க... இங்கே நான்  பார்த்து கொள்கிறேன்" என சொல்லி தர்ஷனுடன் பைக்கில் அனுப்பி வைக்கிறாள் ரேணுகா.

சிறிது நேரத்தில் நந்தினி, சக்தி மற்றும் ஜனனி ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். ரேணுகாவை அவர்களை பார்த்து மிகவும் ஆர்வமாக என்ன சொன்னாங்க? காண்ட்ராக்ட் வாங்கிட்டியா? இது சரியா இருக்கா அது இருக்கான்னு கேள்வி கேட்டு கொன்ன ஆனா ஒரு போன் கூட பண்ணி சொல்லல என கேள்விகளை அடுக்குகிறாள். மிகவும் சந்தோஷமாக அனைவருக்கும்  சாப்பாடு  பிடித்தது பற்றியும், அவர்கள் அட்வான்ஸ் பணம் கொடுத்தது பற்றியும் ஜனனி சொல்ல ரேணுகா பூரித்து போகிறாள்.


அம்மாவை போய் பார்த்து பணம் கொடுத்தது பற்றி நந்தினி சொல்கிறாள். பிறகு ரேணுகாவுக்கு ஸ்வீட், மிகவும் பிடித்த கண்ணாடி வளையல் கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறாள். அனைவருக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி வந்தது பற்றி சொல்லி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. நேற்றைய எபிசோடில் குணசேகரன் தொடர்பான காட்சிகள் இல்லாமல் போனது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.