சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் முதல் நாள் எபிசோடில் குணசேகரனை, ஜீவானந்தம் துப்பாக்கியால் சுடுவது போல தூக்கத்தில் கனவு கண்டு மிரண்டு போய் அலறி அடித்து கொண்டு எழுந்து காட்டு கத்து கத்துகிறார். அவரின் கதறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் அவரை சமாதானம் செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அனைவரும் அங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டு கதிரையும் கரிகாலனையும் இரண்டு பக்கமும் காவலுக்காக உட்கார சொல்கிறார். அந்த ஜீவானந்தம் வந்தால் உள்ளே விட வேண்டாம் என்றும் அப்படி அவன் மீறி வந்தால் அவனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி விடுங்கள் என்றும் புலம்பி கொண்டே இருக்கிறார். குணசேகரனை படுக்க வைத்து மாத்திரை கொடுத்து தூங்க வைக்கிறார்கள். அடுத்த நாள் காலை குணசேகரன், கதிர் மற்றும் கரிகாலன் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
அவரை பார்த்து அனைவரும் கதறுகிறார்கள். கதிர் முரட்டுத்தனமாக அவரை தூக்கி கொண்டு திருப்பி போடுகிறான். அனைவரும் பார்த்து மெதுவா செய் என்றாலும் கேட்காமல் அவரை கரிகாலன் உதவியோடு தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சொல்வதற்காக கீழே வந்து பார்த்தால் கார் எதுவும் இல்லை. ஆட்டோவும் கிடைக்காததால் சக்தி தன்னுடைய பைக்கில் கூட்டி செல்கிறேன் என எடுத்து வர அவனிடம் இருந்து சாவியை பிடுங்கி அவனே பைக்கை எடுத்து வந்து குணசேகரனை நடுவில் உட்கார வைத்து கரிகாலனை பின்னாடி வைத்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் குணசேகரன் தலை தொங்கிய படி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார். நான் இருக்கேன் அண்ணன் நீங்க பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது என கதிர் ஒரு பக்கமும் கரிகாலன் ஒரு பக்கமும் நம்பிக்கை கொடுக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர அவசரமாக அவருக்கு முதல் உதவி செய்யப்படுகிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.