தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4:

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியின், இறுதி போட்டி மிக பிரம்மாண்டமாக வரும் ஞாயிறு மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 

ஃபைனல் போட்டியாளர்கள்:

இந்த போட்டியில், ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோத உள்ளனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இறுதி போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயன்:

இந்த நிலையில் தற்போது, சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது