விஜய் டிவியில் திங்கள் முதல் சனி இரவு வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியலின் இன்றைய (மே 13) எபிசோடில் முத்து குடித்து விட்டு வரவில்லை என்பதை மீனா நம்பவில்லை. ஊதி காட்ட சொன்னதும் தான் மீனா நம்புகிறாள். "குடிக்காமலே பெரிய பிரச்சினை ஆயிடுச்சு அது தான் எதுக்கு என இன்னைக்கு குடிக்கல" என முத்து சொல்ல மீனா சந்தோஷப்படுகிறாள்.
சிறகடிக்க ஆசை: அடுத்த நாள் காலை முத்து ஒரு அவசர சவாரிக்காக செல்ல அவனுடைய காரில் வந்த கஸ்டமர் ஒரு ஷோரூம் உரிமையாளர். அவரை இறக்கிவிட்டதும் ரவுடிகள் சில பேர் அந்த கஸ்டமரை கடையை கம்மி விலைக்கு எழுதி கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்கள். அந்த ரவுடிகளை முத்து அடித்து விரட்டிவிடுகிறான். முத்துவை உள்ளே அழைத்து செல்கிறார் அந்த கஸ்டமர்.
முத்துவுக்கு மீனா ஆதரவு:
முத்துவை ஒதுக்கும் ரோகிணி: ரவி, ஸ்ருதி, மனோஜ் என அனைவருமே இது நல்ல யோசனையாக இருக்கிறது என சொல்ல ரோகிணி முதலில் போய் கடையை பார்த்துவிட்டு வரலாம் அதற்கு பிறகு யோசிக்கலாம் என சொல்கிறாள். மீனா முத்துவை அழைத்து "உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. அத்தை உங்களை எப்படி அசிங்கப்படுத்தி பேசுறாங்க பாருங்க" என மீனா சொல்ல "என்ன தான் இருந்தாலும் மனோஜ் என்னோட அண்ணன். அவன் படிச்சு தான் இருக்கானே தவிர அவனுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. பணத்தை எங்கயும் கொண்டு போய் ஏமாந்து விட கூடாது. இதிலாவது அவன் உருப்பட்டு அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும். யார் என்ன சொன்னாலும் நான் செய்வதை செய்து கொண்டே தான் இருப்பேன் " அனைவரும் சேர்ந்து அந்த ஷோரூம் பார்க்க செல்கிறார்கள். கடையை பார்த்ததுமே அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. உள்ளே சென்று உரிமையாளரிடம் பேசிவிட்டு கடையை சுற்றி பார்க்கிறார்கள். உரிமையாளர் கடையை பற்றியும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றியும் சொல்கிறார். மற்ற விஷயங்களை பேச செல்லும் போது ரோகிணி "நாங்க பேசிக்கறோம்" என சொல்லி முத்துவை ஒதுக்கிவிடுகிறாள். அது முத்துவுக்கும் மீனாவுக்கு மனவேதனையாக இருக்கிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.