Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


முத்து போலீஸ் ஸ்டேஷன் சென்று போலீசிடம் கெஞ்சுகிறார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் "கோர்ட்டில் கேஸ் வரும் பார்த்துக்கோ" என்று  இன்ஸ்பெக்டர் சொல்லி விடுகிறார். மீனா ஓயின் ஷாப் செல்கிறார். அங்கு நிறைய பேர் மது வாங்குவதற்காக அமர்ந்திருக்கின்றனர். அப்போது ”சிட்டி அவரு கரைக்ட்டா 12 மணிக்கு வந்தாருனு சொல்றத பார்த்தா வேற ஏதோ நடந்து இருக்கணும்” என்று நினைத்துக் கொண்டு மீனா பைக்கை நிறுத்தி விட்டு இறங்குகிறார். 


அங்கு அமர்ந்திருப்பவர்கள் மீனாவை பார்த்து விட்டு ”காலம் மாறி போச்சு ”என்று சொல்கின்றனர். அப்போது அங்கு நின்றிருக்கும் யூடியூபர் ஒருவர் தன் போனில் கேமராவை ஆன் செய்து விட்டு, ”குழாய் அடியில தண்ணி பிடிக்குறதுக்கு வெயிட் பன்ற பொம்பளைங்கள பார்த்து இருப்போம். ஆனா இங்கு ஒயின் ஷாப் திறக்குறதுக்குள்ள வந்து இருக்குற இந்த பெண் மணி பத்தி கேட்கலாம்” என்று அவர் சொல்கிறார்.


பின் மீனாவிடம் சென்று ”குடிக்கலனா உங்களுக்கு கை கால் எல்லாம் ஒதறுமா சொல்லுங்க இந்த பழக்கம் உங்களுக்கு எப்படி வந்தது” என்று கேட்கிறார். அதற்கு மீனா ”கொஞ்சம் பக்கத்துல வாங்க” என்று கூப்பிட்டு அந்த யூடியூபர் கன்னத்திலேயே அறைந்து விடுகிறார். ”என்ன ஏதுனே தெரியாம கேமராவை தூக்கிட்டு வந்துடுவிங்களா? என்று மீனா கேட்கிறார். ”என் புருஷனுக்கு ஒரு பிரச்சனை அதுக்காக இங்க வந்து இருக்கேன். அது தெரியாம லூசு மாதிரி வீடியோ எடுத்துட்டு இருக்க” என்று மீனா கேட்கிறார். 


பின் அவர் ”மக்களே கண்ணகி, சாவித்திரி, நலாயினி வரிசையில ஒரு வீர மங்கை, சொல்லுங்க மேடம் உங்க கணவருக்காக நீங்க எப்டி போராட போறீங்க? என்று கேட்கிறார். ”நீங்க பிரபலமாகுறதுக்கு எங்கள மாதிரி ஆட்களோட வாழ்க்கையில விளையாடுறிங்களா?” என்று கேட்கிறார். மீனா பாருக்குள் சென்று அங்கிருக்கும் சிசிடிவிஃபுட்டேஜை காண்பிக்க சொல்லி கெஞ்சுகிறார். ஓனரும் அனுமதி கொடுக்கின்றார். 


”இவன் ஒரு பொறுக்கிங்க எங்களுக்கு வேண்டாதவன். இவன் தான் வேணுன்னே வீடியோ எடுத்து போட்டு இருக்கான்” என்று சிட்டியை பார்த்து விட்டு என்று மீனா சொல்கிறார். பின் எனக்கு இந்த வீடியோவை அனுப்புரிங்களா என்று கேட்டு சிசிடிவி காட்சிகளையும் வாங்கி கொள்கின்றார். மீனா முத்துவின் கார் ஷெட்டுக்கு வருகிறார். அதற்குள் ரவியும் அங்கு வந்து விடுகிறார். மீனா முத்துவை கட்டிப் பிடித்து ”என்னன்னவோ பேசிட்டேன் மன்னிச்சிடுங்க” என்று சொல்லி அழுகிறார். பின் முத்து தான் குடிக்கவில்லை என வீடியோ வெளியிடுகிறார். அண்ணாமலை அந்த வீடியோவை பார்த்து விட்டு அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.