'சிறகடிக்க ஆசை' (மே 23 ) எபிசோடில் இந்த வாரம் மீனாவும் முத்துவும் மனோஜ் ரோகிணி ரூமில் படுக்க வேண்டும் என்ற பாட்டியின் கண்டிஷனுடன் இன்றைய எபிசோட் துவங்குகிறது. மனோஜுக்கு ரூமை விட்டுக்கொடுக்க மனசு இல்லை. அதனால் வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தாலும் சார்ஜர் வேணும், தலையணை வேணும் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி ரூம் கதவை தட்டுகிறான். முத்து அவனுடைய பொருள் அனைத்தையும் எடுத்து கொடுத்துவிட்டு "இதுக்கு அப்புறம் கதவு தட்டுன அவ்வளவு தான்" என மிரட்டி அனுப்பிவிடுகிறான். 

 

மனோஜ் இன்னும் ஒரு வாரம் எப்படி தாக்குபிடிப்பது அது மட்டுமில்லை ஒவ்வொரு மாசமும் இப்படி தான் நடக்கபோகுது என நினைத்து புலம்ப "இது இன்னும் ஒரு வாரத்துக்கு தான். அடுத்த வாரம் ஸ்ருதி வெளியில் படுக்கும் போது நிச்சயம் பிரச்சினை பண்ணுவா. அப்போ இதுக்கு ஒரு நல்ல முடிவு வரும்" என சொல்லி மனோஜை சமாதானம் செய்கிறாள்.

 

 


 

மனோஜ் இரவு முழுக்க தூங்காமல் அடுத்த நாள் விஜயாவை போய் ஏத்தி விடுகிறான். விஜயாவும் "ஒரு வாரம் தான் பொறுத்துப்போ. கொஞ்ச நாள் நானும் உங்க அப்பாவும் வெளியில் படுக்கும் போது உனக்கே இது தெரியலையா? முதலில் ஷோரூம் திறக்கும் வேலையை போய் பார்" என சொல்லிவிடுகிறாள்.

 

அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மனோஜ் ஷோரூமை செலிபிரிட்டி யாரையாவது வைத்து திறப்பு விழா நடத்துவது குறித்து சொல்ல அனைவரும் எதற்காக தேவையில்லாமல் காசை வீணாக்க வேண்டும். அவங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக அந்த பணத்தை பிசினஸுக்கு பயன்படுத்தலாம் இல்லையா என அனைவரும் அட்வைஸ் செய்கிறார்கள். 

 

 

செலிபிரிட்டி வந்து திறந்து வைத்தால் ஷோரூமுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல விஜயா முகம் மாறிவிடுகிறது. அதை முத்து கவனித்து விட "உன்னுடைய கடையை வீட்ல இருக்க அம்மா, அப்பா, பாட்டி இல்ல உன்னோட பொண்டாட்டியை வைச்சு திறக்க வேண்டியது தானே. அது ஏன் உனக்கு தோணவே இல்லை" என முத்து சொல்ல விஜயா முகம் மலர்கிறது. 

 

அதை கவனித்த ரோகிணி உடனே அத்தையே ஷோரூம் திறந்து வைக்கட்டும் அது தான் சரியாக இருக்கும் என அந்தர் பல்டி அடிக்க அனைவருக்கும் ஷாக்காக இருக்கிறது. ஆனாலும் மனோஜ் முகம் வாட்டமாகவே இருந்தாலும் சம்மதம் சொல்கிறான். விஜயா சந்தோஷப்படுவதை பார்த்து முத்துவும் சந்தோஷப்படுகிறேன். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) எபிசோட் கதைக்களம்.