சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) இன்றைய (ஜூன் 4) எபிசோடில் ரோகிணி கிரிஷிடம் பேச வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் முத்து வீட்டிலேயே இருப்பதால் அவனை எப்படியாவது வீட்டில் இருந்து கிளப்பிவிட வேண்டும் என அவளுடைய ஃப்ரெண்ட் வித்யாவிடம் சொல்லி ஏதாவது செய்து முத்துவை வெளியில் கிளப்ப ஐடியா கேட்கிறாள். வித்யாவும் அவளுடைய ஃப்ரெண்ட் மூலம் முத்துவுக்கு சவாரி கொடுப்பது போல போன் செய்து அவனை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறாள்.


 



முத்து வெளியே சென்றதும் ரோகிணி அவளுடைய அம்மாவிடம் சண்டை போடுகிறாள். "எதற்காக சென்னை வந்த. நீ ஒழுங்கா பாத்துகிட்டு இருந்தா இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது. ஒரு தடவை என்னோட வாழ்க்கையை நீ நாசம் பண்ணது பத்தாதா? இப்போ தான் என்னோட வாழ்க்கையில முன்னேறி வந்துகிட்டு இருக்கேன். அது உனக்குப் பிடிக்கலையா?" என பயங்கரமாக திட்டுகிறாள்.


பதிலுக்கு ரோகிணியின் அம்மா "அப்போ நீயே உன்னோட பிள்ளையை பாத்துக்கோ. கல்யாணம் நடந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. ஆனா இதுவரைக்கும் கிரிஷ் பத்தி நீ உன்னோட வீட்ல சொல்லவே இல்ல. நான் போனதுக்கு அப்புறம் அவளோட நிலைமை என்ன நினச்சா எனக்கு பயமா இருக்கு. அவனை ஆசிரமத்தில் சேத்துடுவியோ என எனக்கு பயமா இருக்கு" என சொல்கிறார். "கிரிஷ் என்னோட பையன். அவனை நான் எப்படி அப்படியே விட்டுடுவேன்" என ரோகிணி சொல்ல அதை கிரிஷ் கேட்டு விடுகிறான். "அத்தை நீ தான் என்னோட அம்மாவா?" எனக் கேட்க, அதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். அவனை கட்டியணைத்து அழுகிறாள்.


மீனா வித்யா வீட்டுக்கு வந்து விடுகிறாள். வித்யாவுக்கு எப்படி பூ கட்டுவது என சொல்லி கொடுக்கிறாள். அப்போது வித்யா மீனாவைப் பற்றி பெருமையாக பேசுகிறாள். ரோகிணியைப் பற்றி பேசும் போது "நானும் ரோகிணியும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்" என சொல்லவும் "அப்போ நீங்களும் ரோகிணியும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸா?" என மீனா மாறி மாறி ரோகிணி பற்றி ஏதாவது கேள்வி கேட்க அது அனைத்தையும் மிகவும் சிரமப்பட்டு சமாளிக்கிறாள். 


எப்படியாவது மீனாவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைக்கிறாள் வித்யா. அப்போது வித்யா வீட்டுக்கு ரோகிணியின் மாமாவாக வந்த மலேசியா மாமா வீட்டுக்கு வருகிறார். வித்யாவை பார்த்து ரொம்ப நாளாச்சு என சொல்லி அவளுக்கு கறி எடுத்து கொண்டு வருகிறார். அவரை வித்யா ஓரமாக அழைத்துச் சென்று திருப்பி அனுப்ப முயற்சி செய்கிறாள். ஆனால் "இது ரோகிணியோட மாமா குரல் போல இருக்கே"  என மீனாவுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) கதைக்களம்.