எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜூன் 3) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லப்பட்ட குணசேகரனை பார்க்க ஞானம், கதிர், தர்ஷன் மற்றும் கரிகாலன் விரைகிறார்கள். அங்கே சென்று அண்ணனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். குணசேகரனோ தம்பிகளிடம் மிகவும் நல்லவர் போல நடிக்கிறார்.


"என்னுடைய தம்பிகள் என்றால் கம்பீரமாக இருக்கணும். ஆம்பளைங்க தான் முன்னால் போகணும். பொம்பளைகள் நம்ம பின்னாடி தான் வரணும். வீட்டு பொம்பளைங்க முன்னாடி தான் அசிங்கமா போச்சு. நான் வெளியே வரேனோ இல்லையோ, நீங்க குணசேகரன் தம்பிகளா கௌரவமான தளி நிமிர்ந்து நடக்கணும். சொத்தை சரிசமமா பிரிச்சுக்கோங்க. தர்ஷனை நினைச்சு தான் கவலையா இருக்கு. அவனை பாத்துக்கோங்க" என மிகவும் நல்லவர் போல பாசாங்கு சேர்கிறார். அவர் பேசுவதைக் கேட்டு தம்பிகளும் உருகி விடுகிறார்கள்.  


 




பின்னர் குணசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்கிறார்கள். வீட்டில் உள்ள பெண்களை குணசேகரனுக்கு எதிராகப் பேச வேண்டாம் என வீட்டுப் பெண்களிடம் சொல்ல சொல்லி வக்கீல் இவர்களிடம்  சொல்லி அனுப்புகிறார்.

ஈஸ்வரி அப்பா வீட்டுக்கு வர, அவரிடம் ஈஸ்வரியை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார் விசாலாட்சி அம்மா. அந்த நேரத்தில் ஞானம் வந்து தர்ஷினி, ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியிடம் குணசேகரனை வெளியில் கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறார்கள். "தயவு செஞ்சு யாரும் அண்ணனை பத்தி கோர்ட்டில் வாயை திறக்காதீங்க. அவர் வெளியே வந்த பிறகு நாம பேசிக்கலாம்" என சொல்லி சந்தனம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களோ நாங்கள் உண்மையை தான் சொல்வோம் என உறுதியாக சொல்லிவிடுகிறார்கள். அதைக் கேட்டு ஞானத்துக்கும் கதிருக்கும் கோபம் தலைக்கேறுகிறது. இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கதிர் நந்தினியை தரதரவென ரூமுக்கு இழுத்துச் செல்கிறான். அவளை குணசேகரனுக்கு சாதகமாகப் பேச சொல்லி வலுக்கட்டாயப்படுத்துகிறான். "அந்தப் பிள்ளை வெண்பாவுக்கு பத்து வயசு. நம்ம தாராவோட வயசு. அவங்க அம்மாவை கொன்றது யாரு? நீங்களும் உங்க அண்ணனும் தானே " என நந்தினி சத்தம் போட, கதிர் அவளை அடிக்க கை ஓங்குகிறான். தாரா கதிரை "அப்பா" எனக் கத்தி அடக்குகிறாள்.


 




ஞானம் ஐஸ்வர்யாவை வைத்து ரேணுகாவை மிரட்டுவதற்காக ரூமில் போட்டு அடைத்து வைக்கிறான். "இதைப் பாரு ரேணுகா... கோர்ட்ல வைச்சு நீ என்ன சொல்லப் போறியோ, அத வைச்சு தான் உன்னோட பிள்ளை உன்கிட்ட வருமா வராதான்னு சொல்ல முடியும்" என மிரட்டுகிறான். அவன் செய்த இந்த செயல் அனைவருக்கும் எரிச்சலை கொடுக்கிறது.


 




வீட்டுக்கு வந்த ஈஸ்வரியை அவமானப்படுத்தி பேசுகிறான் கதிர். "உண்மை என்னனு இப்போ தானே தெரியுது. புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு..." என வாய்கூசாமல் ஈஸ்வரியை ஜீவானந்தத்துடன் சேர்த்து வைத்து பெருகிறான் கதிர். அவன் பேசுவதைக் கேட்ட அனைவரும் எரிச்சலாக்கிறார்கள். ஈஸ்வரி அதற்கு கொடுத்த பதிலைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.