சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் ரோகினியின் மலேசியா மாமாவை பார்த்தது பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். 


முத்து : இந்த பார்லர் அம்மா இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே எனக்கு ஏதோ சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு. அதுக்கு பின்னால ஏதோ ஒரு மர்மம் இருக்கு. உன்னோட வண்டி காணாம போன போது வண்டியோட போட்டோவை காட்டி என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டேன் இல்ல. அந்த மாதிரி நாம எல்லாரும் சேர்ந்து ஊர்ல எடுத்திகிட்ட போட்டோவை காட்டி அந்த மலேசிய மாமா பத்தி விசாரிக்கலாம். அப்படி அவர் இந்த ஊர்ல தான் இருக்காருன்னு நிச்சயமா மாட்டிப்பார்" 


மீனா : பரவலா நீங்க கூட நல்ல யோசிக்குறீங்க" என்கிறாள்.


 



ரோகிணி மீனாவும் முத்துவும் பேசி கொள்வதை கீழே இருந்து கேட்டு விடுகிறாள். போலீஸ் வேலை எல்லாம் பாக்குறான் இந்த முத்து. இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டணும் என மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். 


அடுத்த நாள் ரோகிணி அனைவருக்கும் இருக்கும் நேரமாக பார்த்து துபாயில் இருக்கும் மலேசியா மாமாவுடன் வீடியோ காலில் பேசுவது போல ட்ராமா போடுகிறாள். பேக் கிரௌண்டில் வெளிநாட்டில் இருப்பது போல பெரிய பெரிய பில்டிங் எல்லாம் இருக்கிறது.  அனைவரும் அதை நம்புகிறார்கள் ஆனால் மீனாவுக்கு முத்துவுக்கும் மட்டும் குழப்பமாகவே இருக்கிறது. நானும் மலேசியா மாமா கிட்ட பேசுறேன் என போனை வாங்கி கொள்கிறான்.


"முத்து:  எப்படி மாமா இருக்கீங்க? துபாய்ல எங்க இருக்கீங்க? அந்த தெரு பேரு சொன்னா என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் அங்க வண்டி ஓட்டிட்டு இருக்கான். அவனை வந்து உங்களை பார்க்க சொல்வேன்" என நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறான். 


பிரௌன் மணி என்ன சொல்வதென புரியால் தட்டு தடுமாறுகிறார். உடனே ரோகிணி போனை முத்துவிடம் இருந்து வாங்கி விடுகிறாள். பின்னர் நான்  உங்களுக்கு போன் செய்கிறேன் என சொல்லி காலை கட் செய்துவிடுகிறாள். 



"மீனா : அப்போ நான் பார்த்தது வேற யாரையோ தான் போல. அது தான் ரோகிணியோட மாமா துபாயில இருந்து போன் பேசினாரே" என்கிறாள். 



முத்து : நேத்து நீ சொல்லும் போது கூட கொஞ்சம் சந்தேகம் இருந்துது. ஆனா  இப்போ தான் எனக்கு காம்பரம் ஆச்சு. இதுலே ஏதோ ஜிமிக்ஸ் வேலை இருக்கு" என்கிறான்.


"மனோஜ் : இத்தனை நாள் கால் பண்ணாத உங்க மாமா இப்போ எப்படி பண்ணாரு. ஜீவா குடுத்த காசுல தானே நாமே பிசினஸ் ஆரம்பிச்சோம். உங்க அப்பா அனுப்புன காசுன்னு சொல்லறாரு. 5 லட்சம் வேற போட்டு இருக்கேனு சொல்லறாரு. 


ரோகிணி : நீ தானே டீலருக்கு கொடுக்கணும்னு சொன்ன. அப்படி சொன்ன தானே வீட்ல நம்புவாங்க. 


மனோஜ் : உங்க அப்பா சீக்கிரம் வெளியில வந்தா என்னோட பிசினஸ்க்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்கிறான். ரோகிணி அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறாள். 


"வித்யா: உங்க வீட்டுல எல்லாரும் நம்பிட்டாங்களா? அந்த முத்துவும் மீனாவும்?


ரோகிணி : வீட்ல எல்லாரும் நம்பிட்டாங்க. அவங்க இரண்டு பெரும் நம்புனா என்ன நம்பலைனா என்ன?"


"பிரௌன் மணி : ஒன்னு சொல்றேன் தப்ப நினைச்சுக்காதமா. எவ்வளவு தான் பொய் சொன்னாலும் ஒரு நாள் மாட்டும் போது இழப்பு பெருசா இருக்கும். ஜாக்கிரதையா இருந்துக்கோ மா"."


 



"ஸ்ருதி : இந்த வீடியோல ஒருத்தர் தன்னோட லவ்வரை மூணு கிலோமீட்டர் தூக்கிட்டே நடந்து இருக்கார். அவங்களுக்கு இடையிலே இருக்க லவ்வை இப்படி எக்ஸ்பிரஸ் பண்ணிகிட்டாங்க. நீயும் அதே போல என்னை இந்த வீட்டுக்குள்ளேயே மூணு தடவை சுத்தி வரணும்" என ரவியிடம் சொல்ல ரவியும் அவள் சொன்னது போல செய்கிறான். அதை முத்துவும் மீனாவுக்கு பார்த்து விசாரிக்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.