Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


"ஏங்க மனசுல ஒரு விஷயத்தை உண்மையா நெனச்சி வேண்டினால கடவுள் நமக்கு வழிகாட்டுவாரு" என மீனா சொல்கிறார். "நீ என் கிட்ட சொல்லி இருந்தா நான் உன்னை இப்படி விட்டு இருக்கவே மாட்டேன். உனக்கு நான் இருக்கேன் மனோஜ், உன் ட்ரீம் கண்டிப்பா நடக்கும்" என ரோகிணி சொல்கிறார்.


"எப்படி? அதான் பணம் இல்லையே!" என மனோஜ் சொல்கிறார். "ரோகிணி ரூமுக்குள் கூட்டிச் சென்று என்ன பண்ணி வச்சிருக்க மனோஜ்?" என அழுதுக்கொண்டே மனோஜை அடிக்கிறார். "நான் வாழுறதே உனக்காக தான் மனோஜ். உன்னை இந்த நிலைமையில நான் எப்டிடா விடுவேன்?" என ரோகிணி கேட்கிறார். 


ஸ்ருதி ரவியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். வீட்டுக்குப் போலாம் வா என ஸ்ருதி கூப்பிடுகிறார். “எத்தனை நாளைக்கு இங்கேயே இருப்ப?" எனக் கேட்கிறார். “ஸ்ருதி இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பிங்க” என ரவியின் ஃப்ரண்ட் கேட்கிறார். “நைட் எல்லாம் சரியா தூங்குறது இல்ல. இங்க எந்த வசதியும் இல்லை” என அவர் ஸ்ருதியிடம் சொல்கிறார். “நான் தான் சொல்றேன் இல்லை. உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன்” என ரவி சொல்கிறார். “நான் உன் வீட்டுக்கு கூப்பிட்டேன்” என ஸ்ருதி சொல்கிறார். 


பின் முத்து தனக்கு உதவி செய்ததை ரவியிடம் சொல்கிறார். “இருந்தாலும் முத்து மேல இருக்க கோவம் எனக்கு போகாது” என ஸ்ருதி சொல்கிறார். “அவ இப்டி நடந்துக்குறத நம்ம என்ன புதுசாவா பார்க்குறோம்?” என ஸ்ருதியின் அப்பா சொல்கிறார். ஸ்ருதி வீட்டுக்கு போனதை நினைத்து அவர்கள் வருத்தப்படுகின்றனர். ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வருகின்றனர். இதைப் பார்த்து விஜயாவும் அண்ணாமலையும் சந்தோஷப்படுகின்றனர். ஸ்ருதி தான் வீட்டுக்கு வந்ததை கேக் வெட்டி கொண்டாடுகிறார்.


அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். “இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லாம போய்டுமோனு நெனச்சேன். எப்பிடியோ ஒரு முடிவு வந்துடுச்சி” என ரவி சொல்கிறார். மேரேஜ் அப்படிங்கறது டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் மாதிரி என மனோஜ் சொல்கிறார். “என்னடா மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிட்டிங்களா?” என முத்து கேட்கிறார். “உன் ஹோட்டலுக்கு வந்து வாடானு நான் கூப்டேன். நீ வரல. ஆனா உன் பொண்டாட்டி வந்து கூப்டதும் வந்துட்ட” என முத்து சொல்கிறார். என்னடா பண்றது என ரவி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.