Siragadikka Aasai Today Episode :  'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 18) எபிசோடில் விஜயாவின் நடன பள்ளிக்கு ஸ்ருதியின் அம்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க வந்து இருக்கிறார். விஜயாவிடம் 'நீங்க ஆடி நான் பார்த்ததே இல்லை' என சொன்னதும் 'நான் உங்களுக்கு நமஸ்காரம் செய்து காட்டுறேன்' என அனைவரும் பரதம் மூலம் நமஸ்காரம் செய்கிறாள் விஜயா. அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு பாராட்டுகிறார்கள். 


விஜயா இந்த நடன பள்ளியை நினைத்து பெரிய பெரிய கனவெல்லாம் காணுகிறாள். 100 மாணவர்களாவது சேர்வார்கள். இந்த இடம் பத்தாது அதனால் மாடியில் ஒரு ஷீட் போட்டு அங்கு கிளாஸ் வைத்துக்கொள்ளலாம் இப்படி பல கனவுகளோடு இருக்கிறாள். பார்வதி வீட்டு வாசலில் பெரிய பேனர் போர்டு எல்லாம் வைத்து இருக்கிறார்கள். ஆனால் யாரும் டான்ஸ் ஸ்கூலில் வந்து சேர்வது போல இல்லை. 



பார்வதி வீட்டில் காலிங் பெல் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் டான்ஸ் ஸ்கூல் பற்றி விசாரிக்கத்தான் வந்து இருக்கிறார்கள் என ஆசையாக போய் பார்த்தால் தண்ணீர் கேன், மளிகை சாமான், பழைய துணி இப்படி யாராவதுதான் வருகிறார்கள். அந்த நேரத்தில் ஒருத்தர் வந்து டான்ஸ் ஸ்கூல் பற்றியும் எத்தனை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் எவ்வளவு வருமானம் இப்படி பல கேள்விகளை அடுக்க விஜயாவும் பந்தாவாக 80 பேர் சேர்வாங்க.


ஒருத்தருக்கு 2000 ரூபாய் கணக்கில் 80000 வரை ஒரு மாசம் வருமானம் வருமென சொல்கிறாள். வந்த அந்த நபர் எலக்ட்ரிசிட்டி போர்டில் இருந்து வருவதாகவும் இது கமர்சியல் இடம் என்பதால் இனி மூன்று மடங்கு கரெண்ட் பில் கட்ட வேண்டும் என சொல்ல பார்வதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.


இது கமர்ஷியல் இடம் எல்லாம் கிடையாது வீட்டில் வைத்து தான் சொல்லி கொடுக்க போறோம் என சொல்லி அந்த நபரை அனுப்பிவிடுகிறார்கள். ஒருவர் குழந்தையோடு வந்து இது டான்ஸ் கிளாஸ் தானே என விசாரிக்க அவரும் ஏதாவது வரி வசூல் பண்ண தான் வந்து இருப்பார் என நினைத்து இங்க கிளாஸ் எதுவும் எடுக்கல. நீங்க கிளப்புங்க என அனுப்பிவைத்து விடுகிறாள் பார்வதி. விசாரிக்க வந்த ஒரு நபரும் போனதால் மிகவும் மனவேதனையில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறாள் விஜயா. 



விஜயா இடிந்து போய் உட்கார்ந்து இருப்பதை பார்த்த அண்ணாமலை "இதை செய்தா ஆளுங்க வருவார்களா இல்லையா என யோசிக்காமல் செய்தது உன் தப்பு. பொறுமையா இரு வருவாங்க" என ஆறுதல் சொல்கிறார். முத்துவும் அம்மா சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஒரு ஐடியா போடுகிறான்.  


விஜயா கவலையுடன் பார்வதி வீட்டில் இருக்க யாரோ வந்து காலிங் பெல் அடிக்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.