Siragadikka Aasai serial July 24 : உணர்ச்சிவசப்பட்டு பேசி மாட்டிக்கொண்ட ரோகிணி; பிளான் போட்ட விஜயா - சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : குழந்தை பெற்றுக் கொள்ளும் சீனுக்கு டப்பிங் செய்து எமோஷனலான ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்கிறேன் என உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய பிரசவ அனுபவத்தை பகிர்ந்து மாட்டி கொள்கிறாள் ரோகிணி.

Continues below advertisement

Siragadikka Aasai Serial July 24 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும் செல்வமும் மனோஜ் கொடுத்த பணத்தில் கார் ஓன்றை வாங்குவதற்காக பார்க்க செல்கிறார்கள். முத்துவுக்கு இரண்டு கார் மிகவும் பிடித்து இருக்கிறது. மீனாவை வர சொல்லி அவளை செலக்ட் செய்ய சொல்லலாம் என மீனாவுக்கு போன் பண்ணி அந்த இடத்துக்கு வர சொல்கிறான். மீனா கார்களை பார்த்துவிட்டு முத்துவுக்கு ஆலோசனை சொல்கிறாள்.

Continues below advertisement

 

 

"மீனா : இப்போ கார் வாங்குவது அவசியமா? வீட்டில் இப்படி பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும் போது நாம மட்டும் இப்படி சந்தோஷமா கார் வாங்கிகிட்டு வீட்டுக்கு போனா எப்படி? அத்தையும் மாமாவும் பேசிக்காம இருக்காங்க. அவங்க சந்தோஷமா இருந்தா தானே நாமளும் சந்தோஷமா இருக்க முடியும். வீட்டில் எல்லா  பிரச்சினையும் சரியான பிறகு நாம கார் வாங்கிக்கலாம்" என்கிறாள்.

"முத்து : இதை எப்படி சரி செய்யணும் என எனக்கு தெரியும். அதை நான் பார்த்து கொள்கிறேன்" என்கிறான்.

விஜயா கோபமாக பார்வதி வீட்டுக்கு போகிறாள். அங்கு சென்று ஸ்ருதி அவளை மதிக்காமல் பேசியதை பற்றி சொல்லி கத்துகிறாள்.

"விஜயா : இதுவரைக்கும் அந்த முத்து தான் என்னை எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பான். இப்போ இந்த பணக்கார பைத்தியமும் அப்படி தான் இருக்கு. நான் என்னோட நகையை எடுத்து கொடுத்து இருக்கணுமாம். அதுமட்டும் இல்லாம அந்த மீனாகிட்ட மன்னிப்பு கேட்கணுமாம். வீட்ல பிரச்னை முடியட்டும் அவளை எங்க வைக்கணுமோ அங்க வைக்குறேன்" என சத்தம் போடுகிறாள்.

ஸ்ருதி டப்பிங் செய்யும் இடத்தில் குழந்தை பிரசவத்திற்கான ஒரு சீனுக்கு டப்பிங் பேச சொல்கிறார்கள். அந்த காட்சியை ஸ்ருதி பார்த்ததும் மிகவும் எமோஷனலாகி அதற்கு டப்பிங் பேசுகிறாள். அழுது கொண்டே கத்தி கத்தி ஸ்ருதி டப்பிங் பேசிய பிறகு மிகவும் எமோஷனலாகி வருத்தப்படுகிறாள். தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நடந்தை பற்றி சொல்லி மன்னிப்பு கேட்கிறாள்.

"ஸ்ருதி : குழந்தை பொறக்கணும்னா இவ்வளவு கஷ்டப்படணுமா? ஸ்ருதியின் அம்மா : அதெல்லாம் எல்லருக்கும் நடக்குறது தானே. நீ ஏன் இதை நினச்சு பீல் பண்ணுற? ஏதாவது குட் நியூசா?

ஸ்ருதி : அதெல்லாம் இல்ல மம்மி. நான் எமோஷனலாகிட்டேன். அது தான் போன் பண்ணேன்" என சொல்லி போனை வைத்து விடுகிறாள்.

அதே நினைப்பாக வீட்டுக்கு போகிறாள் ஸ்ருதி. மீனாவும் ரோகிணியும் ஸ்ருதி ஏதோ ஒரு மாதிரி வருவதை பார்த்து என்ன நடந்தது என கேட்கிறார்கள்.

"ஸ்ருதி : டப்பிங் செய்ததை பற்றி சொல்லி குழந்தை பெத்துக்குறது ரொம்ப ஈஸி என நினைச்சேன். அந்த சீன டப் பண்ண பிறகு தான் அது எவ்வளவு கஷ்டம் என புரிஞ்சுது. எனக்கு பயமா இருக்கு.

மீனா : குழந்தை பெத்துக்கணும்னா அப்படி இருக்கத்தானே செய்யும்" என்கிறாள்.

அதற்கு ரோகிணி தன்னுடைய அனுபவத்தை நினைத்து கர்ப்பமாக இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் எப்படி எப்படி இருக்கும் என மிகவும் உணர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள். அதை மீனாவும் ஸ்ருதியும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். முதலில் அதை கவனிக்காத ரோகிணி பின்னர் அதை புரிந்து கொண்டு ஷாக்காகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola