Siragadikka Aasai serial August 31 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா தெரிந்தவரிடம் இருந்து விஜயாவுக்கு ஒத்தடம்  கொடுப்பதற்காக விசாரித்து அதற்கான அனைத்தையும் தயார் செய்கிறாள். அப்போது அங்கு வந்து பார்த்த 'முத்து இதெல்லாம் உனக்கு தேவைதானா? நீ என்ன பண்ணாலும் உன்னை அவங்க நல்லபடியா பேசப்போறது இல்ல. தேவையில்லாமல் இதெல்லாம் பண்ணி வாங்கி கட்டிக்காத மீனா' என்கிறான். மீனா அப்பவும் கேட்காமல் "அவங்க வலியில் துடிக்கும் போது என்னால் பாத்துகிட்டு சும்மா இருக்க முடியல" என்கிறாள்.




மீனாவை பற்றி தப்புத்தப்பாக சொல்லி விஜயாவை ஏத்தி விடுகிறாள் ரோகிணி. அந்த நேரம் பார்த்து மீனா ஒத்தடம் கொடுக்க எடுத்து வருகிறாள். விஜயா வழக்கம் போல திட்ட மீனா அதை அங்கேயே வைத்து விட்டு சென்று விடுகிறாள். மீனா சென்றதும் அதை எடுத்து வைத்து ஒத்தடம் கொடுத்து கொள்கிறாள் விஜயா. சூடு ஆறிப்போனதால் தானாகவே கிச்சனுக்கு சென்று சூடு செய்ய போகிறாள் விஜயா. அப்போது மீனா பரணில் இருந்து ஏதாவது ஒரு பொருளை தேட, மீனா எற வைத்திருந்த ஸ்டூலை விஜயா தட்டி விட்டதால் மீனா இறங்க முடியாமல் கீழே விழா போக முத்து வந்து அவளை தாங்கி பிடித்து விடுகிறான். ஆனால் அதற்குள் பரணில் இருந்த அரிசி மாவு, கோலமாவு எல்லாம் விஜயா மீது கொட்டி விட பத்திரகாளியை போல நிற்கிறாள்  விஜயா. 



 


வீட்டில் உள்ள அனைவரும் விஜயாவை பார்த்து பயந்து போகிறார்கள். பிறகு என்ன நடந்தது என சொல்லவும் மீனா தான் வேண்டும் என்றே செய்ததாக பழி போடுகிறான் மனோஜ். ஸ்ருதி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்து விஜயாவை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸில் வைத்து விடுகிறாள். இதை ரோகிணி விஜயாவிடம் போட்டுக்கொடுத்து ஸ்ருதிக்கு எதிராகவும் விஜயாவை திருப்பி விடுகிறாள். 


கொந்தளித்த விஜயா என்னோட வா ரோகிணி என பார்வதி வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். அங்கே ஸ்ருதியின் அம்மாவை வர வீட்டில் ஸ்ருதி விளையாட்டு தனமாக நடந்து கொள்வதை பற்றியும் மீனாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுவதையும் பற்றி சொல்லி ஸ்ருதியின் அம்மாவை ஏத்திவிடுகிறாள் விஜயா.  இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.