Siragadikka Aasai Serial August 14 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ஜோடிகளுக்கான இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் கணவனிடம் சிக்கலான ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் உங்கள் மனைவி அல்லது அம்மாவை வண்டியில் அழைத்து வர வேண்டும் என்றால் யாரை அழைத்து வருவீர்கள் என கேட்கப்படுகிறது. அதற்கு அனைத்து ஆண்களும் மனைவியை தான் அழைத்து வருவேன் என சொல்ல முத்து மட்டும் "நான் வண்டியை மீனாவிடம் கொடுத்து அம்மாவை அழைத்து போக சொல்வேன். போயிட்டு மீனா திரும்பவும் வந்து என்னை கூட்டிட்டு போவா. கல்யாணம் ஆனா அம்மாவ மறந்துட கூடாது இல்ல" என சொல்ல அனைவரும் கைதட்டுகிறார்கள்.


 




திருப்திகரமான வாழ்க்கை என்றால் எதை சொல்வீர்கள்? உங்கள் மனைவியுடன் கலந்து ஆலோசித்து சொல்லுங்கள் என்கிறார்கள். அதற்கு மனோஜும் ரோகிணியும் பிளான் பண்ணுகிறார்கள். எப்படி சொன்ன மார்க் வருமோ அப்படி நான் சொல்லிக்கிறேன் என மனோஜ் சொல்கிறான். மீனாவும் முத்துவும் அந்த நேரத்தில் மனசில் என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லலாம் என முடிவு செய்கிறார்கள். 


மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் சந்தோஷம் என மிகவும் நாசூக்காக மனோஜ் பதில் சொல்கிறான். அன்னிக்கு வாழ்க்கையை அப்பப்போ வாழ்வது தான் எங்களுக்கு சந்தோஷம் என ரவி சொல்கிறான். போதும் என சொல்ல யாருக்கும் மனசு வராது. போதும் என நாம சொல்ல கூடியது சாப்பாடு மட்டும் தான். அன்னைக்கு வர சவாலுக்கு என்ன தேவையோ அதுக்கு ஏத்த மாதிரி வாழ்ந்துட்டு போகணும். அது தான் திருப்தியான வாழ்க்கை என்கிறார்கள் முத்துவும் மீனாவும். 


கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் யார் முதலில் மன்னிப்பு கேட்பீர்கள் என நடுவர்கள் கேட்கிறார்கள். "நான் தான் மன்னிப்பு கேட்பேன். ஸ்ருதி தப்பு பண்ணாலும் அதை ஒத்துக்க மாட்டா. அதனால நான் தான் சாரி கேட்பேன்" என ரவி சொல்கிறான். "எங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வராது. அதனால இதுவரைக்கும் சாரி கேக்க வேண்டிய அவசியமே வந்ததில்லை" என்கிறான் மனோஜ். "நாங்க இரண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுப்போம். ஆனா சாரி எல்லாம் சொல்லிக்கிட்டது கிடையாது. அதுவாகவே சரியாகி பேசிக்கொள்வோம். நான் அல்வா வாங்கி தருவேன். மீனா புடிச்சதை சமைச்சு கொடுப்பா. அப்படியே சண்டையும் பூ மாதிரி வாடி போயிடும்" என்கிறரர்கள் முத்துவும் மீனாவும். 


 



நடுவர்கள் ரிசல்ட் சொல்லும் நேரம் வருகிறது. மனோஜ் நடுவர்களையே குறை சொல்ல, மனோஜும் ரோகிணியும் எப்படி பதில் சொல்லலாம் என பிளான் பண்ண குறும்படத்தை போட்டு காட்டுகிறார்கள். மனோஜுக்கு அவமானமாக போகிறது. கணவன் மனைவிக்குள் சண்டையே வரவில்லை என்றால் அவர்கள் இருவரும் எதையோ மறைத்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம். நல்ல கணவன் மனைவி என்றால் நிச்சயம் சண்டை வரும். காதல், அன்பு, பாசம் எந்த அளவுக்கு முக்கியமோ அது போல சகிப்பு தன்மையும் மிகவும் முக்கியம்.


ரவியும் ஸ்ருதியும் இன்னும் கணவன் மனைவியாக வாழ வில்லை. இன்னும் காதலர்களாகவே இருக்கிறார்கள் என சொல்ல அவர்களுக்கு பயங்கர சந்தோஷமாகிவிடுகிறது. 


மீனாவுக்கு முத்துவும் தான் போலித்தனம் இல்லாத எதார்த்தமான ஜோடிகள் என சொல்லி அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கிறார்கள். அனைவரும் சந்தோஷமாக கைதட்டி பாராட்ட ரோகிணி மனோஜ் முகம் மட்டும் வெந்து கொண்டிருக்கிறது.



வீட்டில் விஜயா ஆராதியுடன் காத்துகொண்டு இருக்கிறாள். மனோஜ் ரோகிணி வந்ததும் ஆரத்தி எடுக்க போக அவர்கள் நாங்கள் ஜெயிக்க வில்லை என்கிறார்கள். அதுக்கு ரவியும் ஸ்ருதியும் வந்ததும் அவர்களும் இல்லை என சொல்ல அப்போ யார் தான் ஜெயிச்சது என கேட்கிறாள் விஜயா. அப்போது மீனாவின் அம்மாவும் தங்கையும் வீட்டுக்கு வருகிறார்கள். பின்னாடியே மேல வாத்தியத்துடன் மீனாவும் முத்துவும் வருகிறார்கள். அவர்கள் தான் ஜெயித்தார்கள் என சொல்லவும் விஜயா ஷாக்காகிறாள்.  இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.