Siragadikka Aasai August 12 : விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 12) எபிசோடில் ஜோடிகளுக்கான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதால் முத்துவும் மீனாவும் ரூம் கட்ட அது பயன்படும் என போட்டியில் நாங்கள் கலந்து கொள்ள தயார் என்கிறார்கள். வழக்கம் போல மனோஜும் ரோகிணியும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
"ஸ்ருதி : உண்மையான காம்படீஷனை விட நம்ம வீட்ல நடக்குற காம்படீஷன் இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அவங்க இரண்டு பேரும் வின் பண்ண போறேன் என சொல்றாங்க. உண்மையிலேயே நாம தான் வின் பண்ண போறோம். வா நாம போய் ப்ராக்டிஸ் பண்ணலாம்" என சொல்லி உள்ளே போகிறார்கள்.
விஜயா " என்னங்க ஆளாளுக்கு நான் தான் ஜெயிப்பேன் என சொல்றாங்க
அண்ணாமலை : நல்லது தானே... ஆரோக்கியமான போட்டி" என்கிறார்.
ரோகிணிக்கு இந்த போட்டியில் கலந்து கொள்வதில் பெரிய அளவுக்கு விருப்பம் இல்லாததால் மனோஜிடம் வேண்டாம் என சொல்கிறாள். நாம தான் பெஸ்ட் ஜோடி என நமக்கு தெரியும் ஆனா இந்த ஊருக்கும் அது தெரியணும். நமக்கு லாபமும் கிடைக்கும் என சொல்லி ரோகிணியை சம்மதிக்க வைக்கிறான் மனோஜ்.
முத்து பலமாக போட்டியில் என்ன கேள்வி கேட்பார்கள் என தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கிறான்.
"மீனா : எந்த மாதிரி இருக்கும் என தெரியலையே... வாங்க நாம ரவிகிட்டேயும் ஸ்ருதிகிட்டேயும் போய் கேட்கலாம்" என்கிறாள்.
ரூமில் ரவியும் ஸ்ருதியும் இல்லாததால் மாடி சென்று பார்க்கிறார்கள். அங்கே இருவரும் மல்லுக்கட்டி கொண்டு இருப்பதை பார்த்து சண்டை போடுகிறார்கள் என நினைத்து தடுத்து விடுகிறார்கள்.
ரவி : நாங்க சண்டை போடல அண்ணி. யார் ஸ்ட்ராங்கா இருக்கீங்க அப்படினு குதர்க்கமா கேள்வி கேட்டா அது தான் ப்ராக்டிஸ் பண்ணி பாக்குறோம்.
முத்து : அப்படி சண்டை போட சொன்ன அது எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.
ஸ்ருதி : அதுக்காக அப்படி தான் கேப்பாங்கன்னு இல்லை. ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு புரிஞ்சு வைச்சு இருக்காங்க. ஹஸ்பண்ட் பத்தி வைஃப் கிட்டேயும் வைஃப் பத்தி ஹபாண்ட் கிட்டேயும் கேப்பாங்க. புடிச்ச சாப்பாடு என்ன? புடிச்ச ஊர் என்ன ?இப்படி வேற மாதிரி கேப்பாங்க.
முத்து : எனக்கு எதுவுமே தெரியாதே..
ரவி : அது தான் டைம் இருக்குல்ல போய் ப்ராக்டிஸ் பண்ணுங்க" என முத்துவையும் மீனாவையும் அனுப்பி வைக்கிறார்கள்.
அடுத்த நாள் போட்டி நடக்கிறது. ஆறு ஜோடிகள் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள் என சொல்லி அவர்களை அறிமுகம் செய்து கொள்ள சொல்கிறார்கள். அனைவரும் இங்கிலீஷ்ல பேச முத்துவும் மீனாவும் ஒரு மாதிரி ஃபீல் செய்கிறார்கள்.
அனைவருக்கும் கைதட்டி வரவேற்ற ஆடியன்ஸ், முத்துவும் மீனாவும் அவர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது யாரும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதை பார்த்து மீனாவுக்கு முத்துவுக்கும் சங்கடமாக போகிறது.
முதல் ரவுண்டில் பெண்களை மட்டும் அழைத்து அவர்களின் தனி திறமைகளை பற்றி கேட்கிறார்கள். அப்போது ஒருவர் நன்றாக பாடுவேன், நன்றாக ஆடுவேன் என சொல்ல ரோகிணி நான் நன்றாக மேக் அப் போடுவேன், ஒரு பையனை கூட பெண் போல மேக் அப் மூலம் காட்ட முடியும் என்கிறாள். நான் வேறு ஒருத்தர் மாதிரி பேசி காட்ட முடியும் என்கிறாள் ஸ்ருதி. மீனா என்ன திறமை இருக்கு என சொல்ல முடியாமல் முழிக்க, மீனாவால் கண்ணை கட்டிக்கிட்டு கூட பூ கட்ட முடியும் என முத்து சொல்ல ஆமா நான் காட்டுவேன் என்கிறாள் மீனா.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்து காட்ட, ரோகிணி ஒரு பையனுக்கு பெண் போல மேக் அப் போடுகிறாள். அதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைகிறார்கள். முத்துவும் ரோகிணியை பாராட்டுகிறான். அதை பார்த்து மனோஜுக்கு பெருமையாக இருக்கிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.