Siragadikka Aasai serial July 23 : ரோஷமாக பணத்தை திருப்பி கொடுத்த ரோகிணி.. சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today : நகைக்கான பணத்தில் 2 லட்சத்தை முத்து மீனாவிடம் கொடுக்கிறாள் ரோகிணி. மீனாவுக்கு ஆதரவாக பேசி விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள் ஸ்ருதி. சிறகடிக்க ஆசையில் இன்று.
Continues below advertisement

சிறகடிக்க ஆசை ஜூலை 23
Siragadikka Aasai Serial July 23 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணியும் மனோஜும் வீட்டுக்கு வந்து 2 லட்ச ரூபாயை முத்துவிடம் திருப்பி கொடுக்கிறார்கள். ரோகிணி அப்பா பணத்தை அனுப்பியதாக சொல்லி கொடுக்கிறார்கள். மீதம் உள்ள 2 லட்ச ரூபாயை சீக்கிரமாக கொடுத்துவிடுகிறோம் என சொல்கிறாள் ரோகிணி.
முத்து மீனாவிடம் அந்த பணத்தில் நகை வாங்கி வந்து விடலாம் என அழைக்கிறான். மீனாவோ பணத்தை சேர்த்து வைத்து சீக்கிரம் கார் ஒன்று வாங்கிவிடலாம் என ஐடியா கொடுக்கிறாள்.

அண்ணாமலை ஹாலிலேயே படுத்து கொள்கிறேன் என சொல்ல மீனாவும் முத்துவும் அவரை ரூமில் போய் படுக்க சொல்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் அவர் கேட்க மறுக்கிறார்.
"விஜயா : எனக்கு உள்ளே குளிராக இருக்கிறது நான் வெளியில் படுத்து கொள்கிறேன். எனக்காக யாரும் வெளியில் எல்லாம் படுத்து கொள்ளவேண்டாம்" என சொல்ல முத்து அண்ணாமலையை ரூமுக்கு அழைத்து செல்கிறான்.
அடுத்த நாள் காலை ஸ்ருதி, மீனா மற்றும் ரோகினி மூவரும் விஜயா பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள்.
"மீனா : அத்தையும் மாமாவும் பேசிக் கொள்ளாமல் இருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. மாமா கிட்ட எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. நான் சொன்னா அத்தை கேக்க மாட்டாங்க. மூணு பேரும் போய் சொல்லலாமா? " என சொல்லி ஸ்ருதியையும் ரோகிணியையும் விஜயாவிடம் அழைத்து செல்கிறாள் மீனா.
"ரோகிணி : மாமா கிட்ட நீங்களாவது போய் பேசலாம் இல்லையா?
விஜயா : அவர் தான் என்னோட மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என சொல்லிட்டாரே.
ஸ்ருதி : ஆன்ட்டி, நீங்க மீனா கிட்ட சாரி சொல்லிட்டா அங்கிள் வந்து உங்ககிட்டதான பேச போறாரு. சோ சிம்பிள் " என்கிறாள்.
"விஜயா : நான் அவள் காலில் விழணும் என சொல்லி உன்ன இங்க கூட்டிட்டு வந்தாளா?
ஸ்ருதி : மீனா ஒன்னும் சொல்லலை. நானாக தான் சொல்கிறேன். நீங்க தானே தப்பு பண்ணீங்க. மனோஜ் தப்பு பண்ணாம தடுத்து இருக்கணும். சாரி சொல்றதுல என்ன உங்களுக்கு?
விஜயா : இதுக்கு தானேடி ஆசைப்பட்ட. உன்னோட காலில் வந்து விழணும்னு" என மீனாவிடம் விஜயா எகிற ஸ்ருதி மீனாவை அழைத்து சென்று விடுகிறாள்.
முத்து செல்வத்திடம் வீட்டில் நடந்த பிரச்சினை பற்றி சொல்லி மனோஜ் 2 லட்சம் ரூபாயை தந்தது பற்றி சொல்கிறான். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.