Siragadikaa Aasai Sep 3 : விஜயா நினச்ச மாதிரி மீனாவுக்கும் ஸ்ருதிக்கும் பயங்கர சண்டை... டேஞ்சரில் ரோகிணி அம்மா - சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikaa Aasai Today : ஸ்ருதிக்கும் மீனாவுக்கு இடையில் சண்டை வர வேண்டும் என விஜயா போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆனதா?  ரோகிணி அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். அவள் எடுக்க போகும் முடிவு என்ன?

Continues below advertisement

Siragadikaa Aasai serial September 3 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (செப்டம்பர் 3) எபிசோடில் முத்துவும் மீனாவும் ஸ்ருதி ரூமுக்கு சென்று சத்தம் போட்டு சண்டைபோடுவதை வெளியில் இருந்து கேட்டு விஜயா சந்தோஷப்பட அதை எண்ணி அண்ணாமலை மிகவும் வருத்தப்படுகிறார். முத்துவை அழைத்து கண்டிக்கிறார். 

Continues below advertisement

 

"அண்ணாமலை : ஏதாவது பிரச்சினை இருந்தா என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா? எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க? எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல"

 

 

முத்து : இது எல்லாம் ட்ராமா. நாங்க உள்ள உட்கார்ந்து சந்தோஷமா தான் இருந்தோம். அம்மாவை ஏமாற்றுவதற்காக தான் அப்படி சண்டை போடுவது போல நடிச்சோம்" என முத்து சொல்ல அண்ணாமலைக்கு எதுவுமே புரியவில்லை. 

 

ஸ்ருதியின் அம்மாவை அழைத்து விஜயா பேசியது பற்றியும் அதை வைத்து கொண்டு ஸ்ருதியின் அம்மா மீனாவை பயங்கரமாக திட்டியது பற்றியும் சொல்லி புரியவைக்கிறான். ஸ்ருதியின் அம்மாவிடம் சண்டை போட போகும் போது மீனா கொடுத்த ஐடியா பற்றி முத்து அண்ணாமலையிடம் சொல்கிறான். 

 

மீனா : ஸ்ருதியின் அம்மாவிடம் போய் சண்டை போட்டால் உண்மையிலேயே அத்தை எனக்கும் ஸ்ருதிக்கும் இடையில் சண்டை வர வைத்துவிடுவாங்க. அதனால நாம் ஸ்ருதி ரவியிடம் சண்டை போடுவது போல நடிக்கலாம். அத்தையும் சந்தோஷமாக இருப்பாங்க" என சொல்கிறாள். 

 

அது படி மீனா, முத்து, ரவியும் ஸ்ருதியும் சண்டை போடுவது போல ஆக்ட்டிங் செய்கிறார்கள். இதை கேட்ட அண்ணாமலை "இது எங்க போய் முடியும் என தெரியல" என்கிறார். 

 

 

ஸ்ருதி ரவியிடம் விஜயா இப்படி செய்வது எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல இதற்கு உங்க அம்மாவும் தான் காரணம் என ரவி சொல்கிறான். "அவங்களுக்கும் இருக்கு" என சொல்லி ஸ்ருதி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து "நீ எதுக்கு தேவையில்லாம மீனா கிட்ட போய் சண்டை போட்ட. உனக்கு பைத்தியம் பிடிச்சுருச்சா? இது தான் என்னோட வீடு. நீ எங்க விஷயத்துல தலையிடாத" என திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறாள்.

 

ரோகிணியின் மயக்கம் போட்டு விழுந்து விட்டதால் அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார்கள். ரோகிணிக்கு தகவல் சொல்லி வர வைக்கிறார்கள். "அவங்களுக்கு மைல்ட் அட்டாக் வந்தது போல தெரிகிறது. அவரை தனியா விடாதீங்க. யாராவது கூட இருந்து பாத்துக்கணும். அவங்க ஏதோ மனசுல வைச்சுக்கிட்டு கவலைப்படுறாங்க. அதனால ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க" என டாக்டர் சொல்ல அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். 

 

"எதை பற்றியும் நினச்சு கவலைப்படாத. நான் தான் இருக்கேன்ல" என ரோகிணி அம்மாவுக்கு தைரியம் சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola