சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரிக்கு காலேஜில் இருந்து வேலையில் சேருவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வருகிறது. அதை பார்த்து ஈஸ்வரியும் மற்ற மருமகள்களும் சந்தோஷப்பட குணசேகரன் வந்து இது என்ன லெட்டர் என கேட்க ஞானம் என்ன விஷயம் என சொல்கிறான். அதை வாங்கி கிழித்து எறிகிறார் குணசேகரன். வேலைக்கு வெளியில் போவதாக இருந்தால் காலை உடைத்து விடுவேன் என மிரட்டுகிறார்.


ஆனால் ஈஸ்வரி யார் எதிர்த்தாலும் இந்த வேலையில் போய் நிச்சயமாக சேருவேன் என உறுதியோடு இருக்கிறாள். மற்றவர்களும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என நம்பிக்கை கொடுக்கிறார்கள்.


 



குணசேகரன் சங்கத்தின் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஞானத்துடன் செல்கிறார். அங்கே கதிரும் கரிகாலனும் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள வந்த எஸ்.கே.ஆரை வீணாக வம்புக்கு இழுக்கிறார் குணசேகரன். எஸ்.கே.ஆர் தம்பி அரசுக்கும் கதிருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. பின்னர் அவர்கள் அனைவரும் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.



அப்பத்தா விபத்தில் இறந்தது குறித்து சங்கத்தில் உள்ளவர்கள் குணசேகரனிடம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமாக இருந்தவருக்கு தக்க தண்டனை பெற்று கொடுக்க சங்கத்தால் முடிந்த உதவிகளை செய்வதாக சொல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சலுக்கான ப்ரோமோவில் சங்கத்தின் மீட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போது கதிர் தேவையில்லாமல் அரசை வம்புக்கு இழுக்க இருவருக்கும் இடையில் பெரிய  வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது எஸ்.கே.ஆர் அப்பத்தாவுக்கு நேர்ந்த விபத்து குறித்து பேசுகிறார். "அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் இல்லை" என சொல்லவும் குணசேகரன் முகமே மாறிவிடுகிறது.


ஈஸ்வரி முதல் நாள் வேலையில் சேர்வதற்காக காலேஜுக்கு சென்றதும் அங்கே இருக்கும் ஆசிரியர் ஒருவர் வந்து ஈஸ்வரியிடம் "உங்களுக்கு இந்த வேலை கிடைக்கணும் என ஜீவானந்தம் சார் ரொம்ப மும்மரமா முயற்சி பண்ணாரு" என சொல்வதும் ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.


 



 


சக்தியும் ஜனனியும் சென்று ஜீவானந்தத்தை வெளியில் எடுப்பதற்காக வக்கீலை சென்று சந்திக்கிறார்கள். "ஜீவானந்தம் சார்பா வைக்கீலை வைத்து வாதாடி நிச்சயம் அவரை வெளியில் கொண்டு வந்துவிடுவோம்" என சக்தி வக்கீலிடம் சொல்கிறான். "அதற்கு அவசியம் இல்லாமல் போயிடுச்சு" என வக்கீல் ஏதோ சொல்ல ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்