Seetha Raman Oct 03: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் வீட்டுக்கு வந்து சீதாவை கத்தியால் குத்த வந்த விஷயத்தை சொல்லி ஆவேசப்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சேது, அஞ்சலி, சத்யா என மூன்று மகள்களையும் அடித்து வெளுக்க அர்ச்சனா, "என் பொண்ணை நாங்களே அடித்தது கிடையாது, அவங்களை அடிக்க நீங்க யாரு" எனக் கேட்டு ஆவேசப்பட்டு உள்ளே செல்கிறாள். அடுத்து மறுபக்கம் சீதா வீட்டிற்கு வரும் அவரது அப்பா ராஜசேகர் வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
“மாப்ள எப்படி பிறந்து, எவ்வளவு பெரிய வீட்டில வளர்ந்தவர், அவரை போய் இந்த வீட்ல கூட்டி வந்து வச்சிருக்க” என திட்டி இருவரையும் குலசேகரப்பட்டினம் கூப்பிட, வர மறுக்கின்றனர். ராம், “இங்க சந்தோசமாக தான் இருக்கேன்” என்று சொல்லி அவரை சமாதானம் செய்கிறான்.
பிறகு சீதா சேர் எடுத்து போட, அவள் கையில் இருக்கும் காயத்தை பார்த்து என்னாச்சு என்று கேட்க, உண்மையை சொல்லாமல் சமைக்கும் போது சூடு வைத்து கொண்டதாக சொல்லி சமாளிக்கிறாள். ராமை அடுத்த முறை பார்க்கும்போது பிசினஸ் மேனாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி கிளம்புகிறார்.
இங்கே சேது, அர்ச்சனா சொன்ன வார்த்தைகளை எல்லாம் நினைத்தப் பார்த்து பிறகு ராமை சந்தித்துப் பேசி விட்டு வருவதாக சொல்ல, மகா வேண்டாம் என தடுத்து விடுகிறாள். துரை, ராம் பிசினஸ் தொடங்கப்போகும் விஷயம் குறித்து சொல்ல, மகா அதிர்ச்சி அடைகிறாள். சுபாஷ் “அவன் எப்படியும் பணத்துக்காக நம்ம கிட்ட தான் வந்து நிற்பான்” என்று சொல்ல, மகா “அந்த தையல் காரி அதுக்கு விட மாட்டா” என சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து சத்யன் மீராவுடன் வீட்டிற்கு வர, அர்ச்சனா அவர்களை வரக்கூடாது என தடுக்க, அதையும் மீறி வீட்டிற்கு நுழைந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து ஷாக் கொடுக்கின்றனர்.
அர்ச்சனா மகாவுக்கு தகவல் சொல்ல, அவளும் வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமம் எபிசோட் நிறைவடைகிறது.