ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில், "ராம் சீதா தப்பு செய்யல, சூர்யாவும் தப்பு செய்யல இந்த வீட்ல இருக்கவங்க தான் யாரோ என்னமோ பண்ணி இருக்காங்க" என சொல்ல மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சேதுபதி மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர, ராம் சொன்ன விஷயங்களை சொல்லி மகாலட்சுமி கோபப்படுகிறாள். இருவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைய பிறகு சேதுபதி ராமிடம் சென்று "சீதா தப்பு பண்ணி இருக்க மாட்டானு நினைக்கிறியா? அப்படின்னா அவ எதுக்கு ஜெயிலுக்கு போகணும்?" எனக் கேள்வி கேட்க, ராம், “சீதா தப்பு பண்ணி இருக்க மாட்டா” என தன்னுடைய அப்பாவை எதிர்த்து பேசுகிறான். 



SeethaRaman July 10: சத்தியம் செய்யக் கோரிய ராம்.. மகாலட்சுமி செய்த செயல்... சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!


அது மட்டுமல்லாமல் “சீதாவை பார்த்தால் தப்பு பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு, உங்க மனசாட்சியை தொட்டு சத்தியம் பண்ணுங்க” என்று கேட்க, சேதுபதி  “சத்தியம் செய்ய முடியாமல் தடுமாறி நிற்க, மகாலட்சுமி  “யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிற? அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? என் அக்கா லட்சுமி இறந்தபோது கல்யாணமே பண்ணிக்க மாட்டேனே இருக்கறது உங்களுக்காகத்தான், அவர் என்கிட்ட வந்து கேட்டாரு, நான் இன்னொரு குழந்தை பெத்துக்க மாட்டேன் என்று சொன்ன பிறகுதான் அவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அப்படிப்பட்ட மனுஷனை இப்படி அவமானப்படுத்துற” என கோபப்பட்டு கூட்டத்தைக் கலைக்கிறார். 


அதன் பிறகு துரை ராமிடம் வந்து, ”நீ சரியான வழியில் தான் போயிட்டு இருக்க, என் அக்கா லட்சுமி கிட்ட இருந்த உண்மை உன் கிட்ட இருக்கு. ஆனா அது மகாலட்சுமி கிட்ட கிடையாது, நீ யாருக்காகவும் உன்னுடைய மனசை மாத்திக்காத என்று சொல்கிறார்.




அதனைத் தொடர்ந்து மகாலட்சுமி மற்றும் அர்ச்சனா இருவரும் சீதாவை சந்திக்க வர, சீதாவுடன் இருக்கும் பெண்மணி, "நீ உடனடியா போகாத அவங்க கொஞ்ச நேரம் காத்திருக்கட்டும்" என்று சொல்ல, சீதாவை அப்படியே செய்ய இங்கே மகாவும் அர்ச்சனாவும் கடுப்பாகின்றனர். அர்ச்சனா "நாம எதுக்கு அவளுக்காக காத்திருக்கணும் வா போகலாம்" என்று சொல்ல, மகா எனக்கு "அவளை ஜெயிலுக்குள் பாக்கணும்" என்று காத்திருக்கிறாள். 


அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் சீதா வெளியே வர, மகா மற்றும் சீதா இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். இப்படியான சூழலில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.