சன்டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான எதிர் நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



"இனி நான் பெரியப்பா காசில் படிக்க விரும்பவில்லை. இவ்வளவு பெரிய ஸ்கூல் இவ்வளவு பீஸ் கட்டி படிக்க வேண்டிய அவசியமில்லை. அப்பா பீஸ் காட்டினால் பரவாயில்லை. அடிக்கடி பெரியப்பா சொல்லி சொல்லி காட்டுவது எனக்கு அசிங்கமாக இருக்கிறது. கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போய் படிக்கிறேன்" என ஐஸ்வர்யா சொன்னதால் ரேணுகாவும் இனி நான் ஐஸ்வர்யா பக்கம் தான் நிற்க போகிறேன் யார் எதிர்த்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை என தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறாள்.


குணசேகரனிடம் இதைப் பற்றி சொல்ல "நம்ம வீட்டு பிள்ளை கவர்மெண்ட் ஸ்கூலில் படித்தால் அவமானம் இல்லையா" என கேட்க அவரிடத்தில் ஐஸ்வர்யா கொஞ்சமும் தயக்கமின்றி "அப்பா காசு கட்டி படிக்க  வச்சா பரவாயில்லை" என்றதும் ரேணுகாவும் அவளுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். 


இன்றைய எபிசோடில் ரேணுகா, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா மூவரும் ஆட்டோவில் ஸ்கூலில் சேர்ப்பதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ரேணுகா நந்தினியிடம் "இனிமேல் அவரிடம் பர்மிஷன் எல்லாம் கேட்க போறது கிடையாது. இன்பர்மேஷன்  மட்டும்தான் கொடுக்க முடியும்" என்கிறாள். நந்தினியின் நீங்கள் சொல்வது சரிதான்” என்பது போல ஆமோதித்து வருகிறாள்.


 




மறுபக்கம் சக்தியும் ஜனனியும் கௌதமை சந்திக்கிறார்கள். அந்த சமயத்தில் சக்தி, அப்பத்தா ஜனனியிடம் ஒரே ஒரு பெயரைத்தான் அடிக்கடி சொல்லி அவரை சென்று சந்திக்குமாறு ஜனனியிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறாராம் என கௌதமிடம் சொல்கிறான். கெளதம் யார் அது என கேட்டதும் ஜனனி 'ஜீவானந்தம்' என்ற பெயரை சொன்னதும் அதிர்ச்சியில் சிலை போல மாறி நிற்கிறான் கெளதம். கௌதமிடம் தான் பட்டம்மாள் ஷேர் சம்பந்தமான வேலையை ஜீவானந்தம் கொடுத்து டெஸ்ட் வைத்து இருக்கிறார் என்பதால் இந்த தகவல் கௌதமுக்கு ஷாக்காக இருந்தது.   



இன்றைய எபிசோடில் கெளதம் ஜனனியிடம் ஜீவானந்தம் பற்றி சொல்வானா? அல்லது சக்தியையும், ஜனனியையும் ஜீவானந்தத்திடம் அழைத்து செல்வானா? இதற்கு விடை வரும் நாட்களில் தெரியவரும். பட்டம்மாளின் 40% ஷேர் ஜீவானந்தம்  பெயரில் மாற்றாட்ட பிறகு அந்த தகவல் குணசேகரனுக்கு தெரிந்த பிறகு அவர் என்ன ருத்ர தாண்டவம் ஆட போகிறார் என்பதை எல்லாம் பொறுத்து இருந்து பார்க்கலாம்.