SeethaRaman: சீதா வைத்த செக்மேட், சேது சொன்ன வார்த்தை - சீதா ராமன் அப்டேட்!

சீதா வாடகைக்கு இருந்த வீட்டுக்கு வந்து அங்கு மகளிர் குழு தலைவியை சந்தித்து டெய்லர்கள் வேணும் எனக் கேட்க, அவர் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்கிறார். 

Continues below advertisement

 தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Continues below advertisement

இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதா சவாலை நிறைவேற்ற அதற்கான முயற்சிகளை எடுக்க நான்சி சதி வேலைகள் செய்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, சீதா முத்தாரம்மன் கும்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்து சேது, “இதுக்கு மேல சாமி கும்பிட்டுட்டு இருக்க இனி எதுவுமே நடக்கப்போவதில்லை, எல்லாமே முடிஞ்சு போச்சு” என சொல்ல, சீதா “கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும்” என சொல்கிறாள். 

சேதுவைத் தொடர்ந்து மீராவும் அங்கு வந்து அதையே சொல்ல, சீதா மகாவோட கல்லறைக்குப் போகணும் என்று சொல்கிறாள். அதைத் தொடர்ந்து சீதா வாடகைக்கு இருந்த வீட்டுக்கு வந்து அங்கு மகளிர் குழு தலைவியை சந்தித்து டெய்லர்கள் வேணும் எனக் கேட்க, அவர் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்கிறார். 

இந்த விஷயம் அறிந்த மீராவும் சேதுவும் “அவங்களால் எல்லாம் தைக்க முடியாது” எனச் சொல்கின்றனர். அதன் பிறகு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு செல்ல அந்த கம்பெனி பூட்டு போட்டு இருக்கிறது. பிறகு ஓனரிடம் பேச அவர் “மிஷின் இருக்கு, ஆனா டெய்லர்கள் இல்லை” என்று சொன்ன டெய்லர்களை நாங்கள் கூட்டிட்டு வரோம் என சொல்லி வீட்டுக்கு வருகிறாள். 

சேதுவிடம் எல்லா ஏற்பாடுகளும் தயார் என சொல்ல, நான்சி மற்றும் மற்றும் அர்ச்சனா அந்த வழியாக வர, இவர்கள் பேசுவது கேட்காத காரணத்தினால் நான்சி அர்ச்சனாவை உள்ளே அனுப்பி வைக்க, அர்ச்சனா வந்ததும் இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர். பிறகு சுபாஷ் வந்து பேச்சு கொடுத்து விஷயத்தை அறிய முயற்சி செய்ய, அதுவும் தோல்வியில் முடிவடைகிறது. 

இதைத்தொடர்ந்து மகளிர் குழுவைச் சேர்ந்த டெய்லர்கள் சீதா வீட்டுக்கு வந்து இந்த சவாலில் “நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்” என சீதாவுடன் கைகோர்க்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola