தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேச வந்த சீதாவிடம் நான்சி “என்ன முடிவு பண்ணி இருக்க?’ என்று கேட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது “கம்பெனி பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்” என்று சீதா சவால் விட இந்த சவாலை நான்சியும் ஏற்றுக் கொள்கிறாள். 


இந்த விஷயம் அறிந்த ராம் சீதாவை பிடித்து சத்தம் போடுகிறான். அதைத்தொடர்ந்து நான் ஸ்ரீ வக்கீலை வரவைத்து அக்ரீமெண்ட் ரெடி செய்கிறார். அக்ரிமெண்ட் ரெடியானதும் எல்லோரையும் கூப்பிட்டு சீதாவை கையெழுத்து போட சொல்கிறாள். அக்ரிமெண்ட்டில் இந்த சவாலில் தோற்றுவிட்டால் ராமை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என எழுதி இருக்கிறது. 


இதைப் பார்த்து மீரா, துரை, சீதாவின் அம்மா உமா, சேது, ராம் ஆகியோர் கையெழுத்து போட வேண்டாம் என சொல்லி தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் நான்சி இது எனக்கும் சீதாவுக்குமான சவால் என்ன பண்ணனும்னு அவளே முடிவு பண்ணட்டும் என சொல்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.