தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிளைன்ட் இருவர் வந்து இன்னும் 1 வாரத்தில் நாங்க கொடுத்த ஆர்டரை முடித்து கொடுக்கணும் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, சீதா நான்சியிடம் சென்று ஆர்டரை முடிக்க உதவி கேட்க, உனக்கு இந்தக் குடும்பம் முக்கியம்னா தாலியை கழட்டி வச்சிட்டு ராமை பிரிந்து போ எல்லா பிரச்சனையும் நான் தீர்த்து வைக்கிறேன் என்று செக்மேட் வைக்கிறாள். 


இதனையடுத்து சீதா ரூமுக்குள் வருத்தமாக இருக்க, ராம் “நீ எதுக்கு நான்ஸி கிட்ட போய் பேசுன?” என்று கோபப்பட, சீதா “இது எனக்கும் நான்ஸிக்கும் இருக்க பிரச்னை, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்கிறாள். அதன் பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்ஸியை சந்தித்துப் பேசுகின்றனர். நீங்க “அந்த சீதா ஜெயிலுக்குப் போக உதவி பண்ணுங்க, என்னுடைய 25% ஷேரை உங்களுக்கு எழுதி கொடுத்துடுறேன்” என்று சொல்கிறாள். அவர்களும் ஓகே என்று சம்மதிக்கின்றனர்.


மறுநாள் காலையில் சீதா நான்சியிடம் பேச கூப்பிட, சுபாஷ் “அர்ச்சனா நீ இங்கேயே இரு, முதல்ல நாங்க போய் பேசுறோம். அப்புறம் நீ வா” என்று வெளியே வருகின்றனர். சீதா நான்ஸியிடம் பேசணும் என்று சொல்ல, நான்ஸி “வெளியே வந்து என்ன முடிவு எடுத்திருக்க?” என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.