Seetha Raman: பாய்சனால் வந்த பிரச்சனை.. சுபாஷ், அர்ச்சனாவை மடக்கிய போலீஸ் - சீதா ராமன் அப்டேட்!

காவியா, ப்ரியா, அஞ்சலி ஆகியோர் சாப்பிட்டு முடித்து “பாயாசம் குடித்ததும் பாயாசம் ஒரு மாதிரி இருக்கு” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது, மூக்கில் இருந்து ரத்தம் வரத் தொடங்கி மயங்கி விழுகின்றனர்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸியின் திட்டத்தின் படி அர்ச்சனா சாப்பாட்டில் விஷயத்தை கலக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, காவியா, அஞ்சலி, ப்ரியா என மூவரும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு கிளம்பி வந்து விட, அர்ச்சனா போன் பண்ணதும் "எக்ஸ்போர்ட் கம்பெனியில் இருக்கோம், இன்னைக்கு லன்ச் இங்க தான்" என்று சொன்னதும், அதைக் கேட்டு அர்ச்சனா அதிரச்சி ஆகிறாள். 

உடனே சுபாஷ் மற்றும் அர்ச்சனா இவர்களையும் மூன்று மகள்களையும் சாப்பிட விடாமல் தடுக்க எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் போலீஸ் இவர்களை மடக்கி பிடித்து விடுகிறது. இங்கே எல்லாரும் செல்வி கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடுகின்றனர். 

காவியா, ப்ரியா, அஞ்சலி ஆகியோர் சாப்பிட்டு முடித்து “பாயாசம் குடித்ததும் பாயாசம் ஒரு மாதிரி இருக்கு” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது, மூக்கில் இருந்து ரத்தம் வரத் தொடங்கி மயங்கி விழுகின்றனர். இதையடுத்து இவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்கின்றனர். 

டாக்டர் இவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தொடங்க, எல்லாரும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola