ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சேது மற்றும் சுபாஷ் வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


ராமின் தங்கைகள் மூவரும் சீதா சொன்னபடி ட்ரடிஷனல் டிரஸ் போட மாட்டேன் என அடம்பிடித்து ரூமுக்குள் சென்ற நிலையில் சீதா ராமிடம் இது குறித்து சொல்ல அவன் நான் போய் அவங்க கிட்ட என்னன்னு கேட்கிறேன் இன்று கிளம்ப, சீதா இங்க கோபப்பட்டா தான் அவங்க பயப்படுவாங்க என்று சொல்ல ராமும் சரி என்று சொல்ல, எப்படி கோபப்படுவீர்கள்? கோபப்பட்டு காட்டுங்க.. என்று அவனை நன்றாக ஏற்று விடுகிறாள்.


அதைத்தொடர்ந்து ராம் தங்கைகளிடம் ட்ரடிஷனல் டிரஸ் போட சொல்ல அவர்கள் மூவரும் இந்த ஆர்டர் போடுற வேலையெல்லாம் உன் பொண்டாட்டி கிட்ட வச்சுக்க.. எங்ககிட்ட வேண்டாம்.. என்று சொல்ல ராம் உச்சகட்ட கோபமடைந்து சாரை தூக்கி போட்டு உடைக்க இதை பார்த்து பயந்து ட்ரெடிஷனல் டிரஸ் போட ஒப்புக்கொள்கின்றனர்.


அதைத்தொடர்ந்து சேது மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர மகா ஆரத்தி எடுத்து, வரவேற்க கூப்பிட ராம் அவங்கள பார்க்கவே பிடிக்கலை.. என்று கோபப்பட சரி அப்போ நீ ரூமுக்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்.


அடுத்ததாக சீதா ஆரத்தி தட்டை எடுத்து வர அதை தூக்கிப்போட்டு, “இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்” என்று சத்தம் போடுகின்றனர். ”மீரா இப்போ என்ன செய்வது” என கேட்க சீதா, ”என்கிட்ட வேற ஒரு பிளான் இருக்கு” என்று ரூமுக்கு சென்று ராமிடம் நான் இந்த வீட்டை விட்டு கிளம்புறேன் என்று சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான்.


என்னாச்சு என்று காரணம் கேட்க, ”என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டாங்க” என்று சொல்ல ராம் கோபப்பட்டு அவர்களிடம் சண்டை போட கிளம்புகிறான்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய ‌சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.