சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து ஜொலிக்கும் நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். காமெடியனாக என்ட்ரி கொடுத்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். இடையில் உடல் நல குறைவு காரணமாக உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் நடிகர் ரோபோ சங்கர். மனைவி மற்றும் மகளின் அன்பும் அரவணைப்பும் சேர்ந்து அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அவரின் உடல்நிலை தேறிய பிறகு மகள் இந்திரஜா சங்கரின் திருமண ஏற்பாடுகளை மும்மரமாக செய்து விட்டார் ரோபோ சங்கர்.
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கரும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகையாக பிரபலமானார். அதைத் தொடர்ந்து கார்த்தியின் 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் இந்திரஜா ரோபோ சங்கர்.
ரோபோ சங்கர் உறவினரும் 'தொடர்வோம்' அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திக்கும், இந்திரஜா சங்கருக்கும் வரும் மார்ச் 24ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் விமரிசையாக நடைபெற்று அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.
அந்த வகையில் இந்திரஜா - கார்த்திக் இருவரின் ஹல்தி பங்க்ஷன் நேற்று சென்னையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. பல திரைப்பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரே குதூகலமாக இருந்தது. ரோபோ சங்கர் சொந்த ஊரான மதுரையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், மகளின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திரஜா சங்கர் - கார்த்திக் ஹல்தி பங்க்ஷன் புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் இது எல்லாம் நம்ம கலாச்சாரமே இல்லையே என விமர்சனம் செய்து வருகிறார்கள்.