சினிமா நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் எகிறி கொண்டே போகிறது. அந்த வகையில் அதிகமான பேன் ஃபாலோவர்ஸ் கொண்ட ஒரு சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரேஷ்மா முரளிதரன். அவரின் அடுத்த ப்ராஜெக்ட் விரைவில் துவங்க உள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.


ரேஷ்மா:


ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'பூவே பூச்சூடவா' சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். அதற்கு முன்னரே டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரிச்சயமானவராக இருந்தாலும் 'பூவே பூச்சூடவா' சீரியல் மிக பெரிய பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பெற்று கொடுத்தது.


 



நெஞ்சத்தை கிள்ளாதே:


அதை தொடர்ந்து அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட சீரியல்களில் லீட் ரோலில் நடித்து வந்தார். சமீபத்தில் தான் கிழக்கு வாசல் சீரியல் நிறைவடைந்தது. ஒரு சீரியலை முடித்ததும் உடனே அடுத்த சீரியலில் கமிட்டாகிவிடுவார் ரேஷ்மா. அந்த வகையில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற  புதிய சீரியலில் கமிட்டாகி உள்ளார் நடிகை ரேஷ்மா முரளிதரன். 


இந்த சீரியலின் ஹீரோவாக வெள்ளித்திரையில் பிரபலமான ஹீரோவாக இருந்து சின்னத்திரைக்கு வந்த ஜெய் ஆகாஷ் கமிட்டாகி உள்ளார். இவர் ஏற்கனவே 2020ல் ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'நீதானே என் பொன்வசந்தம' சீரியலின் ஹீரோவாக நடித்துள்ளார்.  


 




ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான நீதானே என் பொன்வசந்தம், சீதா ராமன் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தொடர்களை தயாரித்த ஈஸ்தெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் 'நெஞ்சத்தை கிள்ளாதே' புதிய தொடரையும் தயாரிக்க  உள்ளது. இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தேதி மற்றும் டைம் ஸ்லாட் குறித்த விவரம் விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது 'நெஞ்சத்தை கிள்ளாதே' புதிய சீரியலின் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட BTS வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.  


 






 


பணக்கார ஹீரோவும் குறும்புத்தனமான ஹீரோயினாகவும் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் நடித்துள்ளனர் என்பது ப்ரோமோ மூலம் வெளிப்படுகிறது. இவர்களின் காம்போ எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.