Raja Rani 2 : இனிமே ராஜா ராணி 2ல கொஞ்ச நாளைக்கு அர்ச்சனாவோட அலப்பற தான்...சீரியல் ரசிகர்கள் ஆர்வம்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இத்தனை நாளாக சந்தியாவின் போலீஸ் கனவிற்கு முட்டுக்கட்டையாய் இருந்த மாமியார் இப்போது ஒகே சொல்லிவிட்டார். இனிமேல் சந்தியா ஐபிஎஸ் தேர்வு எழுதி பாஸாகி நிச்சயமாக போலீஸ் ஆகிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் டைரக்டர் கதையை சூடிபிடிப்பதற்காக அர்ச்சனா பக்கம் கதையை திருப்பிவிட இருக்கிறார்.
அர்ச்சனா தான் இனிமேல் ஹைலைட் :
கர்ப்பிணியாக இருக்கும் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு அதை மிகவும் கோலாகலமாக நடத்தவிருக்கின்றனர் சிவகாமி குடும்பத்தார். இந்த எபிசோட்களுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. அர்ச்சனாவின் வளைகாப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. அதனால் இனி வரும் எபிசோடில் வளைகாப்பு சீன் நிச்சயமாக உண்டு என்பதை உறுதியளித்து விட்டன இந்த புகைப்படங்கள். இந்த வளைகாப்பு விழாவில் சிவகாமியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்வதி பாஸ்கர் உட்பட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
கோல்மால் அர்ச்சனா செய்யப்போகும் காரியம்:
அடுத்து அர்ச்சனாவுக்கு பெண் குழந்தை பிறக்க அதை கோல்மால் அர்ச்சனா எப்பவும் போல அந்த குழந்தையை ஆண் குழந்தையாக மாற்ற நினைப்பது என வரிசையாக பல ட்விஸ்ட்களை வைக்க உள்ளார் ராஜா ராணி 2 சீரியலின் இயக்குனர் பிரவீன்.
இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல் ராஜா ராணி 2 என்பதால் இந்த எபிசொட்களுக்காக மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்கள். வெளியான இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சீரியல் பிரியர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வளைகாப்பு வீடியோ கிளிப்பிங் இதோ உங்களுக்காக :