தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாலி எடுக்க சுபத்ரா குடும்பத்தினர் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வர்ஷினியை மிரட்டிய இசை:
அதாவது கடையில் வர்ஷினி தடுக்கி விழ ஸ்ரீஜா கையில் இருந்த தாலி கீழே விழ ஸ்ரீஜா கடுப்பாகிறாள், மேலும் வர்ஷினியை அடிப்பதற்கு கை ஓங்க, இசை கையை பிடித்து அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத என்று கோபப்படுகிறாள்.
அதன் பிறகு சுபத்ரா கோவிலுக்கு சென்று ஜோசியரை சந்திக்கிறாள், என் பசங்களுக்கு கல்யாணம் வச்சி இருக்கேன். நீங்க வீட்டிற்கு வரணும் என்று சொல்லி கூப்பிட அவரும் வருவதாக வாக்கு கொடுக்கிறார்.
தொடர்ந்து ஜோசியர் வீட்டிற்கு வருகிறார், ஸ்ரீஜா - விஷால் மற்றும் வர்ஷினி - ராகவ் ஆகியோரின் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து ஆசிர்வாதம் செய்ய சொல்கின்றனர்.
திருமணத்தை நடத்தச் சொல்லும் ஜோதிடர்:
அப்போது இசை வீட்டிற்குள் நுழைய ஜோசியருக்கு விஷாலுக்கும் இசைக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்பது போல் தோன்ற, ஏதோ நடந்திருக்கு.. என்னாச்சு என்று விசாரிக்க நடந்ததை சொல்கின்றனர். பிறகு ஜோசியர் முதலில் ஸ்ரீஜா விஷால் திருமணத்தை நடத்த சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.