தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வர்ஷினியை ஐஸ் கட்டி மீது நிற்க வைத்து தற்கொலை போல் சித்தரித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

வர்ஷினியை காப்பாற்றிய விஷால்:

அதாவது, இசை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து எப்எம் ரேடியோ மூலமாக காரின் நம்பரை கண்டு பிடிக்கிறாள்.  இதனைத் தொடர்ந்து  இந்த காரை டிரேஸ் செய்து விசாரிக்கின்றனர்.

மறுபக்கம் விஷால் பக்கத்து ரூமில் இருந்து தண்ணீர் வெளியே வருவதை பார்த்து, சந்தேகமடைந்து கீழே சென்று ரூம் சாவி வாங்கி வந்து கதவை திறந்து பார்க்க வர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்து அவளை காப்பாற்றி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான்.

Continues below advertisement

பானுமதி மீது சந்தேகம்:

பிறகு இதற்கெல்லாம் காரணம் பானுமதியாக தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் கொள்கின்றனர். பானுமதி வீட்டுக்கு சென்று சத்தம் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.