விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அரசியின் திருமண வாழ்க்கை புரியாத புதிராகவே சென்று கொண்டிருக்கிறது. அரசி தன்னை காதலிப்பதாக ஏமாற்றிய குமரவேலுவை பழிவாங்குவதற்காக தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டு, முத்துவேல் - சக்திவேல் குடும்பத்திற்கு மருமகளாக மாறி இருக்கிறார்.

Continues below advertisement

அரசி சொல்வது பொய் என பல முறை குமாரு நிரூபிக்க நினைத்தும் பலன் இல்லை. அனைத்தும் அரசிக்கு சாதகமாகவே உள்ளது. அதே போல், அரசியை ஒழித்துக்கட்ட வேண்டும் என குமாரவேலு பல முறை முயற்சி செய்தும், அனைத்து விஷயங்களும் அவருக்கு எதிராகவே மாறியது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 507வது எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் தான் இன்றைய எபிசோடில் ஹை லைட். அதாவது அரசியும், குமரவேலுவும் ஜோடியாக கோயிலுக்கு புறப்பட்ட நிலையில், அரசி மீது கொலை காண்டில் இருக்கும் குமரவேல்,  அரசியை பழிவாங்கும் விதமாக இளநீர் குடிக்க போவதாக சொல்லி, நீ போய் வாங்கிட்டு வாடி என அரசியின் அண்ணன் கதிர் கண் முன்னிலையில் அதட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கதிர், குமார் உடன் சண்டைக்கு பாய்கிறார்.

Continues below advertisement

இதில் உஷாரான அரசி வழக்கம் போல் குமாரை விட்டு கொடுக்காமல் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றுகிறார். அண்ணா நாங்கள் விளையாடுகிறோம். அவர் இளநீர் குடித்தால் நல்லது என சொன்னார். நான் வேண்டாம் என கூறினேன். அதனால் தான் அவர் என்னை தள்ளிவிட்டார் என கூறுகிறார்.  இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்ற குமாரவேலு, அரசியை கடைக்கு அனுப்பினார். அங்கு சென்ற அரசி அப்பா நான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகிவிட்டேன் என கூறுகிறார். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் அவரை விரட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தார். 

ஆனால் பலன் இல்லை. அப்போது குமரவேல் வர மீண்டும் அரசி தனது நடிப்பை காட்டி குமரை அங்கிருந்து கூட்டி சென்றார். ஆனால் நடுவழியில் இருவரும் தகராறு ஏற்பட அங்கு போலீஸ் வருகிறது. அரசி போலீசிடம் போய் குமரவேலுவை பற்றி புகார் கொடுக்க, அவரை  குமாரை கைது செய்து விடுவதாகவும் 5 வருடம் வெளியில் வரமுடியாது என்றும் மிரட்டி அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு பாவம் சார் அவரை விட்டு விடுங்கள் என புருஷன் மீது பாசம் இருப்பது போல் நடிக்கிறார். ஒட்டு மொத்தத்தில் இன்றைய தினம் அரசி, குமரவேலுவை குமுற வைத்துவிட்டார் என்பது தான் உண்மை.