பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போது பார்வையாளர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. ரசிகர்களின் பேராதரவுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 - 8.30 வரை ஒளிபரப்பாகிறது. அண்ணன் - தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற நெகிழ வைக்கும் காட்சிகள் அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காண்போரை கண் கலங்க வைத்தது. 










இப்போது இந்த சீரியலில் கூட்டு குடும்பமாக இருந்த மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் அதே ஒற்றுமையாக இருக்க அவர்களது மனைவிகளின் குடும்ப உறுப்பினர்களால் எழுந்த கருத்து வேறுபாடுகளால் குடும்பம் பிரிந்தது. இதனால் தனியாக சென்ற கதிர்-முல்லை புதிதாக ஹோட்டல் பிசினஸ் ஆரம்பித்த காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக நடிகை ஷீலா ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளார். 






சில மாதங்களுக்கு முன்பு அவர் இறப்பது போல கதை மாற்றப்பட்டது. அவரது இறப்பு தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி அந்த மாதத்தில் சீரியல் டிஆர்பியில் முதலிடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து  ஷீலா விஜய் டிவியின் தூண்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.


இதனைக் கண்ட ரசிகர்கள் இறந்தவர் எப்படி மீண்டும் வருவார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் சீரியலில் ஷீலா இறந்தாலும் அடிக்கடி தனத்தின் கனவில் வந்து பேசுவது போல் காட்சிகள் இடம் பெற்றதால் அது தொடர்பான காட்சிகளுக்காக ஷீலா பங்கேற்றிருப்பார் என கூறப்படுகிறது.