ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி பூஜாவுடன் நெருக்கமாக இருப்பது போல நடிக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, வெற்றி பூஜாவுடன் ரொமான்ஸாக இருப்பதாக நடிக்க இதை கேள்விப்பட்டு சக்தி நீ ஓவராக நடிக்கிறாய் என்று வெற்றியிடம் சண்டை போடுகிறாள், வேறு வழி இல்லாமல் உன்னால் தான் சிக்கிக் கொண்டேன் என்று வெற்றி சொல்லுகிறான்.


அடுத்து பூஜா ரங்க நாயகியிடம் சக்தி, வெற்றி இடையே உண்மையிலேயே பெரிய பிரச்சனை இருக்கிறது என்று சொல்ல, ரங்கநாயகி வெற்றியை அழைத்து கேட்க சக்திக்கும் எனக்கும் பிரச்சனை தான் என்று ஒப்புக் கொள்கிறான். 


இதையடுத்து பூஜா சரளாவின் ஆலோசனைப்படி உண்மையிலேயே வெற்றி தன்னை விரும்புகிறானா என்று சோதித்துப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்கிறாள். இதற்காக பூஜா வெற்றியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறாள். சக்தி மறைந்திருந்து என்ன நடக்கிறது என்று பார்க்கிறாள்.


இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.