ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கடத்தப்பட்டதாக மீனாட்சி வீட்டுக்கு வந்து சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைய கொஞ்ச நேரத்தில் அருணும் வீட்டுக்கு வந்து அம்மா அபிராமியும் கடத்தப்பட்டதாக சொல்ல எல்லோரும் பேரதிர்ச்சி அடைந்தனர். 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோயிலுக்கு வந்த அபிராமி, “சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு குடும்பத்தினர் வந்து சாமியை வேண்டிக்கிட்டு நல்ல விஷயத்துக்காக பொங்கல் வைக்கிறோம் உங்கள மாதிரி பெரியவங்க கையால் அரிசி எடுத்துக் கொடுத்தால் அது நல்லபடியா நடக்கும்” என்று சொல்லி அபிராமியை அழைக்கின்றனர். 


முதலில் மறுக்கும் அபிராமி, பிறகு அரிசி எடுத்துக் கொடுக்கச் செல்ல ஒரு மரத்திற்கு பின்னால் அழைத்துச் சென்று அபிராமியை கடத்தி விடுவது தெரிய வருகிறது. 


இந்த விஷயம் அறிந்த கார்த்தி உடனடியாக போலீசுக்கு போன் போட்டு அம்மாவும் தீபாவும் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லி உதவிக்கு கூப்பிடுகிறான். மஃப்டியில் வரும் போலீஸ் கோயிலுக்கு வந்து அபிராமி கடத்தப்பட்ட இடத்தில் சோதனை செய்யும் போது ஒரு சிம் கார்டு கிடைக்கிறது. 


அடுத்ததாக மீனாட்சியை அழைத்து சென்று தீபா காணாமல் போன இடத்தில் தேடுகின்றனர். அடுத்ததாக ஒரு குடோனில் தீபா இரும்புச் சேரில் கட்டி வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. முதலில் மயக்கத்தில் இருக்கும் தீபா பிறகு கண் திறந்து பார்க்க எதிரில் துரை நிற்கிறான். 


தீபா “நீ என்னை கடத்தினது மட்டும் கார்த்திக் சாருக்கு தெரிந்தால் அவர் உடனே கிளம்பி வந்துடுவாரு உன்னை சும்மா விட மாட்டாரு” என வீரவசனம் பேச, கார்த்தி வரமாட்டான் என துரை பதிலடி கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.