ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'மீனாட்சி பொண்ணுங்க'. 


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோயிலில் ரோகித்துக்கு பயந்து ஒளிந்து விட்டு பூஜா வருவதற்குள் பொட்டு வைக்கும் சம்பிரதாயம் முடிந்து விடுகிறது. 


கோயிலுக்கு வந்த புஷ்பாவும் சங்கிலியும் வெற்றியின் மனதில் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல, பூஜாவும் சரளாவும் யோசித்து வெற்றிக்கு வேறு ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்று கோயிலுக்கு அழைத்து செல்கிறார்கள். 




சக்தி வெற்றியை விட்டு பிரியக்கூடாது என்று பய பக்தியாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள். வெற்றிக்கு கோயிலில் வைத்து கல்யாணம் நடக்க இருக்கும் விஷயத்தை சங்கிலியும் புஷ்பாவும் பேசிக்கொண்டிருக்க, இதை நீதிமணி கேட்டு விடுகிறான்.


கோயிலில் சரளாவும் புஷ்பாவும் வெற்றிக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களின் திட்டம் தெரியாமல் வெற்றி சாதாரணமாக கோயிலுக்கு வருகிறான். வெற்றியை பட்டு வேஷ்டி சட்டை மாற்றி வர சொல்லி வெற்றியை அழைத்து மண மேடையில் உட்கார வைக்கிறார்கள்.


பக்கத்தில் பூஜாவையும் உட்கார வைக்க அவன் குழப்பத்துடன் அவர்களை பார்க்கிறான். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.