ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'மீனாட்சி பொண்ணுங்க'.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பூஜா விவாகரத்து பேப்பரில் வெற்றியை கையெழுத்து போட சொன்ன நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சக்தியை டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்த, சக்தி கையெழுத்து போட்டு விடுகிறாள். அதை பூஜா வீடியோ எடுத்துக் கொள்கிறாள். அதனைத் தொடர்ந்து வெற்றியை கையெழுத்து போட சொல்ல, வெற்றி கையை வெட்டிக் கொள்கிறான். அப்படியும் வெற்றி கையெழுத்து போட்டு விடுகிறான்.
வெற்றி சக்தியிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடும் அளவிற்கு வந்துவிட்டது, என்ன பிரச்சனையாகுமோ என்று கவலைப்படுகிறான். மேலும் எப்படி மாப்பிள்ளையை மாற்றுவது என்று திடியனும் கிரியும் டிஸ்கஷன் செய்கின்றனர். மறுபக்கம் சக்தி என்ன திட்டம் போடுவாள் அதை எப்படி முறியடிப்பது என்று சங்கிலியும் புஷ்பாவும் டிஸ்கஷன் செய்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து சக்தி மீனாட்சி வீட்டிற்கு வர, அனைவரும் பேசாமல் இருக்கிறார்கள். பூஜா வெற்றியுடன் அங்கே வந்து கல்யாண பத்திரிக்கை கொடுக்கிறாள். சக்தி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்ட தகவலை சொல்லி, என் கல்யாணத்திற்கு மீனாட்சியம்மா தான் சமைக்க வேண்டும் என்று பூஜா சொல்ல மீனாட்சி அதிர்ச்சியடைகிறாள்.
இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.