மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ரவுடிகளை வைத்து மீனாட்சியை மிரட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.


நேற்றைய எபிசோடில் மீனாட்சி சங்கிலி - சக்தி கல்யாணம் வேண்டாம் என நீதிமணியிடம் சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் நீதிமணி, பத்திரிக்கை எல்லாம் கொடுத்தப்பிறகு இப்படி வேண்டாம் என சொன்னால் என்ன அர்த்தம் என கேட்கிறார். பின்னர் தன் நண்பர்களுடன் இணைந்து மீனாட்சியை மிரட்டி கல்யாணத்தை நடத்த திட்டம் போடுகிறார். 


அதன்படி இரவு நேரத்தில் மீனாட்சி வீட்டுக்கு வரும் சில பெண்கள், பிரசவ வலியால் ஒரு பெண் பக்கத்து தோப்பில் வலியால் துடிக்கிறாள். உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்ட நிலையில் அவரும் பிரசவத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது மீனாட்சி வணங்கும் அம்மன் அவரைப் போக வேண்டாம் என்று சொல்ல,அதையும் மீறி போகிறார்.






மீண்டும் வழியில் அம்மன் வந்து மீனாட்சியை தடுக்கிறது. ஆனால் மீனாட்சி ஒரு கோடு கிழித்து விட்டு இதற்கு மேல் வர வேண்டாம் என்று சாமியை சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார். பின்னர் குறிப்பிட்ட ஒரு இடத்தைக் காட்டிவிட்டு அந்த பெண்கள் மறைந்து விடுகின்றனர். அந்த இடத்திற்கு சென்ற நிலையில் இரண்டு ரவுடிகள் உருட்டு கட்டையுடன் வந்து மீனாட்சியை மிரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து அவர் தப்பித்து ஓடுகிறார்.


இதனையடுத்து வீட்டில் யமுனா அம்மாவை காணாமல் தேடிக் கொண்டிருக்க துர்காவிடம் சொல்லி அம்மாவுக்கு போன் செய்ய மீனாட்சி போன் வீட்டிலேயே இருக்கிறது. தோப்பில் தப்பி ஓடிய மீனாட்சி ரவுடிகளின் கண்ணில் படாமல் ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறார். அந்நேரம் பார்க்க வெற்றியின் முன் தோன்றிய அம்மன் மீனாட்சிக்கு ஆபத்து இருக்கிறது காப்பாற்று என்று கூறுகிறது,இதனையறிந்து  வெற்றி ரவுடிகளுடன் சண்டையிட்டு மீனாட்சியை காப்பாற்ற முயற்சி செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.