பாக்கியலட்சுமி சீரியலில் பள்ளியில் நடக்கும்   பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டத்திற்கு கோபி ராதிகா மற்றும் மயூவுடன் வருவதைப் பார்த்து இனியாவுடன் படிக்கும் சக மாணவிகளின் பெற்றோர் குழப்பமடையும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள்.  இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


மயூ vs இனியா 


மயூ கோபியிடம் அம்மாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க, கோபி உன் முன்னாடி தானே ரிசப்ஷன் நடந்துச்சி என சொல்கிறார். அப்படின்னா நான் உங்களை அப்பான்னு கூப்பிடட்டுமா என சொல்ல உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு என நெகிழ்ச்சியாக கோபி தெரிவிக்கிறார். மயூ டாடி..டாடி என கூப்பிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிலையில் கோபிக்கு இனியா நியாபகம் வருகிறது. 


நடுராத்திரியில் தூங்காமல் தன்னையே சுற்றி வந்த இனியாவால் கோபி கண் கலங்குகிறார். தூக்கத்தில் இருந்து எழும் ராதிகா அவரிடம் என்னவென்று விசாரிக்க இனியா நியாபகம் வந்ததாக சொல்கிறார். அவ மட்டும் என்கூட வந்துட்டா இந்த உலகத்திலேயே ஹேப்பியான மனுஷன் நான் தான் என உற்சாகமாக சொல்கிறார்.  மேலும் இனியா இங்க வந்தா நீ நல்லா பாத்துப்பியா என கேட்க, ராதிகா நல்லா பாத்துக்கலாம் என பதிலளிக்கிறார். என்னதான் அம்மாவுக்கு என்மேல கோபம் இருந்தாலும் அப்பா இருக்குற வரை அவங்க வர மாட்டாங்க என தன் தவிப்பை வெளிப்படுத்துகிறார். 


ஆட்டம் காணும் கோபியின் நிலைமை 


மறுநாள் பள்ளியில்  பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டம் இருக்கிறது. இதற்காக இனியாவுடன் போகும் பாக்யா முன்னதாக அங்கு போய் இனியாவுக்கு எவ்வித அவமானமும் ஏற்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்து கொள்கிறார். இதனைப் பார்த்து இனியா கண் கலங்குகிறார். அந்த பக்கம் ராதிகா மயூவுடன் ஸ்கூலுக்கு கிளம்பும் நிலையில் கோபியை கூப்பிடுகிறார்.


ஆனால் அங்கு வந்தால் இனியா பார்த்து வருத்தப்படுவாள் என கோபி ராதிகாவிடம் சொல்லி சமாளிக்க உங்களுக்கு எப்பவும் இனியா நினைப்பு மட்டும் தான். மயூ எவ்வளவு ஆசையா இருக்கா. அவ வாழ்க்கையில இப்பதான் அப்பா-அம்மா கூட இந்த மீட்டிங் போறேன்னு சந்தோசமா இருக்கா என சொல்ல அரை மனதுடன் கோபி ஸ்கூலுக்கு வர சம்மதிக்கிறார். 


பாக்யா பைக்கில் இனியாவை அழைத்து செல்ல தயாராகும் நிலையில் சரியான பேலன்ஸ் இல்லாமல் பைக் சாய்கிறது. இதனை காரில் ஏறப்போகும் கோபி பார்த்து பதறுவதோடு பாக்யாவை திட்டுகிறார். இதைப் பார்த்து டென்ஷாகும் ராதிகாவிடம் யாரா இருந்தா பைக்ல குழந்தை இருக்குல அதான் அப்படி சொன்னேன் என சொல்லி எஸ்கேப் ஆகிறார். பின்னர் ஸ்கூலுக்கு போன இனியாவிடம் அவ அப்பா வரலையா என சக மாணவிகளின் பெற்றோர் கேட்க பாக்யா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால் மயூ, ராதிகாவுடன் வரும் கோபியை பார்த்து சக மாணவிகளின் பெற்றோர் குழப்பமடைவது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.