KamalHaasan: ‘பத்தல..பத்தல’ கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் டபுள் ட்ரீட் என்ன தெரியுமா?

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள கமல் உலகநாயகன் என்று  திரையுலகிலும், ஆண்டவர் என்று ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 

Continues below advertisement

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Continues below advertisement

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துணை டான்ஸ் மாஸ்டர், ஹீரோ, இயக்குநர், பாடலாசியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7 ஆம் தேதி தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள கமல் உலகநாயகன் என்று  திரையுலகிலும், ஆண்டவர் என்று ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல் தன் படங்களில் போடாத கெட்டப் இல்லை, பேசாத சமூக கருத்துக்கள் இல்லை. அவரின் 16 வயதினிலே, அபூர்வ சகோதரர்கள்,குணா, மைக்கேல் மதன காமராஜன், இந்தியன், அவ்வை சண்முகி, அன்பே சிவம், தசாவதாரம்  உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக எவ்வளவு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை காட்டியிருப்பார் என்பதை காணலாம். 

கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் களத்திலும் மக்களுக்கான தன் பணியை தொடர்ந்து வருகிறார். அதேசமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடந்து 6வது சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும் அபார சாதனைப் படைத்தது. 

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வரும் கமல் ஒரே நேரத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை, அரசியல் களம் ஆகியவற்றின் மூலம் மக்களுடனான தன் பிணைப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் வருகிறது. இதனை ரசிகர்கள் நற்பணிகள் செய்து கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் விஜய் டிவியில் Happy Birthday KamalHaasan  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 

இதில் பங்கேற்கும் கமலுடன் நடிகை குஷ்பு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களோடு விஜய் டிவி நட்சத்திரங்களும்  கலந்து கொள்கின்றனர். இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola