மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
நேற்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டிற்கு வெற்றி வந்த செய்தியை பூஜாவிடம் புஷ்பா சொல்கிறார். இதனால் கோபமாகும் அவர் நேராக மீனாட்சி வீட்டுக்கு வருகிறார். அங்கு நல்லவர் போல நடிக்கும் பூஜா மீனாட்சியிடம் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு தாலி எடுத்து சாமியிடம் வைத்து பூஜாவின் கையில் மீனாட்சி கொடுக்கும் நிலையில் அவர் நழுவ விட, சக்தி பிடித்து வெற்றியிடம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றது.
இதனிடையே இன்றைய எபிசோடில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்திற்காக சக்தி வீட்டுக்கு வந்திருந்த நிலையில், பூஜா போன் வந்தவுடன் அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் வெற்றியை சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என மீனாட்சி உட்கார வைக்கின்றனர். அப்போது சாப்பாடு பரிமாற வரும் சக்தி மற்றும் வெற்றி என இருவரும் பார்வையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் கொள்கின்றனர்.
பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வெற்றி வீட்டுக்கு கிளம்பும்போது, சக்தி அவரிடம் இதுவரை செய்த உதவி அனைத்துக்கும் நன்றி கூறி கை கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் நீதிமணி சங்கிலியிடம் இன்னும் கல்யாணத்துக்கு 48 மணி நேரம் தான் இருக்கிறது. அதுவரை மீனாட்சிக்கு குடும்பம் மற்ற எதைப் பற்றியும் யோசிக்காமல் இருக்கும்படி எதையாவது செய்து கொண்டு இருக்க வேண்டும் என சொல்கிறார். அதனால் நாளைக்கு நலங்கு வைக்கும் விழாவை வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறான்.
மறுநாள் காலையில் மீனாட்சி வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அந்நேரம் பார்க்க வீட்டு வாசலில் பந்தல் போடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடையும் அவர் நீங்க எல்லாம் யார்? உங்களை யார் உள்ளே விட்டது என விசாரிக்க அப்போது நீதிமணி நான் தான் மீனாட்சி இதையெல்லாம் செய்ய சொன்னேன் என சொல்கிறார்.
மேலும் கல்யாணத்துக்கு இன்னும் 48 மணி நேரம்தான் இருக்கு. நலங்கு எல்லாம் வைக்க வேண்டாமா என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவர்களில் சக்தி ரூமுக்குள் செல்லும் போது, அங்கு வரும் துர்கா இப்பவாவது உன் மனசுல இருப்பதை சொல்லுக்கா. வெற்றியைப் பற்றி நீ என்ன நினைச்சுட்டு இருக்க என கேட்கிறார். அதற்கு யமுனாவும் கார்த்தியும் அவ்வளவு லவ் பண்றாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒன்று சேரணும். அதை நினைச்சு தான் நாம சந்தோஷப்படணும் என சக்தி பதில் சொல்கிறார்.
பின்னர் துர்காவை வெளியே அனுப்பிவிட்டு புடவை கட்டி தயாராக, பீரோவை திறந்து பார்க்கும் போது வெற்றி வாங்கிக் கொடுத்த புடவை, நேம் போர்டு எல்லாத்தையும் பார்த்து வருத்தப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.